/tamil-ie/media/media_files/uploads/2018/04/africa-split-up.jpg)
சமீபத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா பகுதியில் மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலப்பிளவு சற்று ஆழமாகவும் உள்ளது. வடக்கே ஏடன் வளைகுடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிளவினால், கென்யாவில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக இந்த பிளவுகள் ஏற்படுகையில் அந்தப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுகின்றது. கென்யாவில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு போன்ற காரணங்கள்தான் நிலப்பிளவிற்கு காரணம் என ஆய்வு நடத்திய வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு அதிகரித்துக்கொண்டே போனால், ஆப்பிரிக்க கண்டம் அமெரிக்காவைப் போல இரண்டாகப் பிரிய வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஏற்பட இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்தனர்.
சுமார் 138 மில்லியன் வருடங்கள் முன்பு அமெரிக்க இரண்டாகப் பிரிந்தது. ஒரு வேளை ஆப்பிரிக்க கண்டமும் இது போல் பிரியுமே ஆனால், அதற்கு சுமார் 100 மில்லியன் வருடங்களாவது ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
,
A rift that appeared overnight in Kenya is several miles long, and some believe it is a sign the continent is splitting in two. Chip Reid reports on what possibly caused this crack. https://t.co/wChPaunVo9pic.twitter.com/V2sjTbXpGy
— CBS News (@CBSNews) April 3, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.