உலக நாடுகளை கவலையடைய செய்யும் கடைசி மாறுபாடாக ஒமிக்ரான் இருக்க வாய்ப்பில்லை என ஆராச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம், பல கிரெக்க வார்த்தைகளை வரும் காலத்தில் நாம் கற்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நோய்த்தொற்றும் வைரஸுக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறது. ஆனால், முந்தைய மாறுபாடுகளை காட்டிலும் ஒமிக்ரான் வேறுபட்டுள்ளது. தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்களிலிருந்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் நாடுகளுக்கு மத்தியில், ஒமிர்கான் அதிவேகத்தில் பரவக்கூடியதாக இருக்கிறது. அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகையில், வைரஸ் அதிகளவில் மாறுபட வாய்ப்புள்ளது.
அடுத்த மாறுபாடுகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை என கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரானின் அடுத்த மாறுபாடும் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தும் அல்லது தற்போதுள்ள தடுப்பூசிகள் எதிராக சிறப்பாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக தடுப்பூசி இருக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தொற்றுநோயியல் நிபுணர் லியோனார்டோ மார்டினெஸ் கூறுகையில், "ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது. பிறழ்வுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மேலும் பல மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும்" என்றார்.
நவம்பர் பாதியில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான், உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இந்த மாறுபாடு டெல்டாவை விட இரண்டு மடங்கு அதிக தொற்றுநோயாகவும், வைரஸின் ஒரிஜினல் பதிப்பை விட குறைந்தது நான்கு மடங்கு தீவிரத்தன்மை கொண்டிருப்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
டெல்டாவை விட ஒமிக்ரான், முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கும், தடுப்பூசி போடப்பட்டவர்களையும் தாக்க அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போடாதவர்களைத் கடுமையான அளவில் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி, ஜனவரி 3-9 வாரத்தில் 15 மில்லியன் புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது முந்தைய வாரத்தை விட 55% அதிகமாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான டாக்டர். ஸ்டூவர்ட் கேம்ப்பெல் ரே கூறுகையில், " தொடர்ச்சியான நோய்த்தொற்றுகள் புதிய வகைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாகத் திகழ்கிறது. உங்கள் பகுதியை சுற்றி பரவலாக தொற்று பாதிப்பு பதிவானல், வைரஸ் உருமாற்றம் நிகழும் வாய்ப்பை வழங்கப் போகிறீர்கள் என்றார்.
ஒமிக்ரான் டெல்டாவை விட குறைவான நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவதால், அதன் போக்கு இறுதியில் ஜலதோஷம் போன்ற சாதாராண தொற்றாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையைத் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று முதலில் தாக்கியபோது, யாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. ஆனால், தற்போது தடுப்பூசி மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதன் காரணமாக, வைரஸ் வைரஸ் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.
வைரஸ் பரிணாம வளர்ச்சிக்கு பல வழிகள் உள்ளன. குறிப்பாக விலங்குகள் வைரஸை அடைகாத்து, அதன் புதிய மாறுபாடை வெளியிட வாய்ப்புள்ளது. செல்லப்பிராணி நாய், பூனை மற்றும் மான்கள், பண்ணையில் வளர்க்கப்படும் மிங்க் ஆகியவை வைரசால் பாதிக்கப்படக்கூடிய சில விலங்குகள் ஆகும். இந்த விலங்குகளில் வைரஸ் உருமாற்றம் அடைந்து, மீண்டும் மனிதரை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மற்றொரு சாத்தியமான வழி என்னவென்றால், ஒமிக்ரான், டெல்டா இரண்டும் தற்போது பரவி வருவதால், இரு வகைகளின் குணாதிசயங்களைக் கொண்ட கலப்பினங்களான "ஃபிராங்கன்வேரியண்ட்ஸ்" நோய் தொற்றை மக்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் என கூறுகின்றனர்.
ஒமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. ஸ்பைக் புரதத்தில் சுமார் 30 மனித உயிரணுக்களுடன் இணைக்க உதவுகிறது. ஆனால் பிரான்சில் அடையாளம் காணப்பட்ட மற்றும் WHO ஆல் கண்காணிக்கப்படும் IHU மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது . ஆனால், அதன் பரவல் வேகம் பெரியதாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
புதிய மாறுபாடுகள் தோன்றுவதைத் தடுக்க, மாஸ்க் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். டெல்டாவை விட ஒமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும் என்றாலும், தடுப்பூசிகள் இன்னும் பாதுகாப்பை வழங்குகின்றன
பூஸ்டர் ஷாட்கள் கடுமையான நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
உலகளாவிய தடுப்பூசி விகிதங்கள் மிகக் குறைவாக இருக்கும் வரை, காய்ச்சல் போல இந்த வைரஸ் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "உலகளாவிய தடுப்பூசி சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, எதிர்கால மாறுபாடுகளிலிருந்து மக்களை பாதுகாத்திட முடியும்" என்றார்.
செயின்ட் மைக்கேல் மருத்துவமனையில் உள்ள உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பிரபாத் ஜா கூறுகையில, "அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள தடுப்பூசி போடாதவர்கள் தான், மாறுபாடுகளில் தொழிற்சாலைகளாக இருக்கின்றனர்.உலகளாவிய தலைமைத்துவத்தில் இது ஒரு மகத்தான தோல்வி, இதை எங்களால் செய்ய முடியவில்லை" என்றார்.
இதற்கிடையில், புதிய மாறுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்று மினசோட்டா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் லூயிஸ் மான்ஸ்கி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.