டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்க்க ஆசையா? இவ்வளவு பணம் இருந்தால் போதும்!

நிலப்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் அடியில் இருக்கும் டைட்டானிக்கை பார்வையிட இது ஒரு அரிய வாய்ப்பு தான்.

By: November 3, 2020, 1:59:24 PM

exploring Titanic’s wreckage? Here’s your chance :  மூழ்கவே மூழ்காத ஒரு கப்பல் டைட்டானிக் என்ற கௌரவத்தை ஒரு காலத்தில் கொண்டிருந்த அந்த கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியது. யாரும் எதிர்பார்க்காத, வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய துயரம் அது. அதன் பின்பு அந்த கப்பல் குறித்து ஆயிரக் கணக்கான ஆவணப்படங்கள் வெளியாகின. கப்பல் மூழ்கிய அந்த நாள் இரவை மையமாக கொண்டு படமும் கூட வெளியானது.

சில நேரங்களில் ஆழ்கடல்களில் மூழ்கி அந்த கப்பல் பற்றி ஆராய்ச்சிகளும் நடைபெறும். அப்போது அந்த முழு ஆராய்ச்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உலக மக்களுக்கு காட்டப்பட்டது. OceanGate Expeditions என்ற அமெரிக்க ட்ராவல் நிறுவனம் 10 நாள் ஆராய்ச்சிக்காக தன்னார்வலர்களை வரவேற்றுள்ளது. அவர்கள் நிலப்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் அடியில் இருக்கும் டைட்டானிக்கை பார்வையிட்டு ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். இது அடுத்த ஆண்டு மே மாதம் 2021ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த ப்ரோஜெக்ட் அடுத்த 2022 ஆண்டு கோடைகாலம் வரை நீடிக்கும் என்று தெரிய வந்துள்ளது, 10 நாள் பயணத்திற்கு ஆகும் செலவு 125,000 அமெரிக்க டாலர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 92 லட்சத்து 91 ஆயிரத்து 187. 50 பைசாவாகும். தி நேசனல் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு பயணத்தின் போதும் மிஷன் ஸ்பெசலிஸ்ட்டுகள் 9 பேர் அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு டைவுக்கும் மூன்று நபர்கள். நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸில் இருந்து 10 நாள் பயணத்திற்கு 125,000 செலுத்துவார்கள்.

இந்த வரலாற்று பயணம் சிட்டிசன் சையண்டிஸ்ட் அணியின் உறுப்பினர்களாக பங்கேற்க வாய்ப்பை வழங்கும். மிஷன் வல்லுநர்களாகக் கருதப்படும் இந்த நபர்கள் விஞ்ஞான இலக்குகளை அடையவும் இந்த டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலையையும் ஆவணப்படுத்தவும் உதவும். பயிற்சியையும் தொடர்ச்சியான அறிவுறுத்தலையும் பெறுவதன் மூலம், இந்த தனித்துவமான வாய்ப்பு ஆய்வாளர்களையும் அமெச்சூர் விஞ்ஞானிகளையும் உண்மையான அறிவியல் சாகசத்துடன் இணைக்கும் என்று நம்பப்படுகிறது.

To read this article in English

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Exploring titanics wreckage heres your chance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X