பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 50 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி அருகே முகம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாட இஸ்லாமியர்கள் கூடியிருந்த இடத்தில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதனை பாகிஸ்தானின் பிரபலமான டான் ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் மஸ்துங்கின் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நவாஸ் காஷ்கோரியும் அடங்குவதாக உள்ளூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான தற்கொலை குண்டுதாரி, பணியில் இருந்த காவல்துறை அதிகாரியின் காருக்கு அருகில் இருந்தபோது குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியாகியுள்ள காணொளிகளில், சாலை முழுவதும் உடல்கள் சிதறிக் கிடப்பதையும், துண்டிக்கப்பட்ட கைகால்கள் சுற்றி கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
Explosion in Pakistan: 52 killed, 50 injured in suicide blast in Balochistan
இதற்கிடையில், குண்டுவெடிப்பை அடுத்து, முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கராச்சி போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர்.
மேலும், முழு உஷார் நிலையில் இருக்குமாறு கராச்சி காவல்துறைக்கு கூடுதல் ஐஜி கராச்சி காதிம் ஹுசைன் ராண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து, ஈத் மிலாத்-உன்-நபி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க கராச்சி காவல்துறைக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உருது மொழியில் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தது, "பயங்கரவாதிகளுக்கு நம்பிக்கை அல்லது மதம் இல்லை" என்று கூறியுள்ளது.
இந்தச் சம்பத்துக்கு உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அகமது புக்டியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“