தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - கிரேலிஸ்டில் இருந்து வெளியே வந்த இலங்கை
இந்த ஆய்வுக் குழு இலங்கையின் தீவிரவாதம், நிதி மோசடி போன்ற பிரச்சனைகளில் திருப்திகரமாக செயல் பட்டிருப்பதால் கிரேலிஸ்டில் இருந்து விலக்கப்படுவதாக அறிவித்தது.
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் , கருப்பு பண மோசடியை ஊக்குவிக்கும் நாடுகளை கண்காணிக்கும் அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (financial Action Task Force) இலங்கை நாட்டை கிரேலிஸ்டில் ( Grey List) பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
Advertisment
கடந்த 2016 ம் வருடம் அக்டோபர் மாதம் நிதி நடவடிக்கை பணிக்குழு இலங்கையை கிரேலிஸ்டில் சேர்த்தது. இதனால், இலங்கையின் தீவிரவாத்திற்கான எதிரான நடவடிக்கைகள், சட்ட விரோதமான பொருட்கடத்தல், நிதிமோசடி செயற்பாடுகள் போன்ற விசயங்களில் இலங்கை அரசின் செயல்பாடுகள் சர்வேதச ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இந்த குழு, இலங்கை அரசின் ஓவ்வொரு வருடமும் ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்.
டபுள் ஆக்ஷன் ரோலில் விஜய் : நான்காவது படம் பிகில்!
சமிபத்தில் நடந்த நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்தில் இலங்கையின் தீவிரவாதம், நிதி மோசடி போன்ற பிரச்சனைகளில் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக கிரேலிஸ்டில் இருந்து விலக்கப்படுவதாக அறிவித்தது.
அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த கூட்டத்தில் எடுத்த முடிவைப் போன்றே , இந்த ஆண்டு மீண்டும் கிரேலிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த வரிடம் பிப்ரவரி மாதத்திற்குள் போதுமான, தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பிளாக்லிஸ்டில் இணைக்கப்படும்.பிளாக்லிஸ்டில் இணைக்கப்பட்டால் சர்வேதச அமைப்பில் இருந்து எந்த நிதியையும் பெற முடியாது. மேலும், பிளாக்லிஸ்டில் உள்ள நாடுகளிடம் முதலீடு வராது என்பதால் பாகிஸ்தான் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டயாத்தில் பாகிஸ்தான் உள்ளது.