உலக கோப்பை செய்தியை நேரலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்த ஆண் செய்தியாளருக்கு இரு பெண்கள் மாறி மாறி முத்தம் தந்த செயல் பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
Advertisment
பாலியல் வன்கொடுமை என்பது ஆண்களால், பெண்களுக்கு மட்டும் நிகழ்த்தப்படும் கொடுமை மட்டுமில்லை. சில சமயங்களில் பெண்களால் ஆண்களுக்கும் நிகழ்ந்தப்படும் அநீதியும் கூட. தென் கொரியாவில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஆண் நிரூபர் ஒருவருக்கு இரண்டு பெண்கள் மாறி மாறி முத்தம் மழையை பொழிந்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த செய்தியாளர், நேரலையில் சிரித்துக் கொண்டே அந்த காட்சியை கடக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரை விடாமல் துரத்தும் அந்த இரண்டு இளம் பெண்கள் தொடர்ந்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டு அநாகரியமான செயலில் ஈடுப்படுகின்றன. இந்த காட்சிகள் நேரலையில் ஒளிப்பரப்பாகின,
அதைத் தொடர்ந்து வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இந்த சம்பவம் தனக்கு நேர்ந்தது குறித்து ஆண் செய்தியாளரும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் ஒரு அழகான ஆண் செய்தியாளரை நேரில் கண்டதும் அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் இதில் எந்தவித தவறான எண்ணமும் இல்லை என்று இந்த செயலில் ஈடுப்பட்ட பெண்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில், இந்த பெண்களுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.