பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தை நோக்கி அரசுக்கு எதிராக நீண்ட பேரணி நடத்தியபோது, வரவேற்பு முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், குஜ்ரன்வாலா நகரில் உள்ள அவரது வரவேற்பு முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வியாழக்கிழமை காயமடைந்ததாக பல உள்ளூர் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் ஃபவாத் சவுத்ரி, இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆஜ் டிவிக்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலில் சுடப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று தலைவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
ஊடகங்களின் வெளியான செய்திப்படி, இஸ்லாமாபாத்தை நோக்கி போராட்டப் பேரணியை வழிநடத்தும் போது இம்ரான் கான் காலில் சுடப்பட்டார். ஆனால், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரான மூத்த தலைவர் பைசல் ஜாவேத் கான் கூறுகையில், தங்களுடைய சக உறுப்பினர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆனால் இம்ரான் கானுக்கு ஆபத்தில்லை என்று கூறினார்.
இம்ரான் கான் கட்சியின் மூத்த உறுப்பினரான ஃபரூக் ஹபீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததாகக் கூறினார். “கோழைகள் இம்ரான் கான் காயமடைந்ததை தங்கள் பகமாகக் காட்டியுள்ளனர். அல்லாஹ் அவரைப் பாதுகாப்பார். முழு தேசமும் இம்ரான் கானின் உயிருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேஹ்பாஸ் ஷெரீப், குஜ்ரானுலா, அல்லாவாலா சௌக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்ததோடு, இந்த சம்பவம் குறித்து உடனடி அறிக்கை அளிக்கக் கோரினார். காவல்துறை ஐ.ஜி மற்றும் பஞ்சாப் தலைமைச் செயலாளரிடம் உடனடியாக அறிக்கை கேட்குமாறு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவுக்கு ஷேஷ்பாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"