அயர்லாந்து கடலில் பிடிபட்ட ரூ.23 கோடி மதிப்பிலான டுனா மீனை, மீண்டும் கடலுக்குள்ளே விட்ட நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, அட்லாண்டிக் கடலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் (குறிப்பாக மீன்) வகைகளை உலகிற்கு காட்டவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கேட்ச் அண்ட் ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியை, அக்டோபர் 15ம் தேதி வரை நடத்த உள்ளனர்.
இதற்காக, அயர்லாந்து கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களது வலையில் பெரிய டுனா மீன் ஒன்று சிக்கியது. இதன் எடை 270 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் பிடிபட்ட அதிக எடை கொண்ட மீன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மீனின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.23 கோடி ஆகும். டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, இந்த டுனா மீனை மீண்டும் கடலில் விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Fish worth 23 crore rupees released it back into the sea
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்