Advertisment

இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு

author-image
WebDesk
New Update
இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

Former Sri Lankan cricketers back protesters, ask President Gotabaya Rajapaksa to step down: இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisment

"தோல்வியடைந்த" தலைவரை தூக்கி எறிவதற்காக தேசம் ஒன்றுபட்டதை நான் பார்த்ததில்லை என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். “தோல்வியடைந்த தலைவரை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாடு ஒன்றுபட்டதை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. உங்களுக்கு எதிரான வாசகங்கள் இப்போது உங்கள் அதிகாரப்பூர்வ வீட்டின் சுவரில் உள்ளது. தயவு செய்து நிம்மதியாக செல்லுங்கள். இன்று #GoHomeGota!" என ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; வீடியோ

“நான் எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கிறேன். விரைவில் வெற்றியை கொண்டாடுவோம். இது எந்த மீறலும் இல்லாமல் தொடர வேண்டும். #Gohomegota,” #அரகலயா என்று ஜெயசூர்யா தனது மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் எழுதியுள்ளார்.

அதிபரை பதவி விலகச் சொல்லி ஜெயசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “முற்றுகை முடிந்துவிட்டது. உங்கள் கோட்டை வீழ்ந்தது. அரகலயா மற்றும் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தயவுசெய்து இப்போது ராஜினாமா செய்ய கண்ணியம் வேண்டும்! #GoHomeGota." என்று பதிவிட்டுள்ளார்.

publive-image

தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரவும் ஆதரவு தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்சேவின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "இது எங்கள் எதிர்காலத்திற்கானது" என்று அவர் ட்வீட் செய்தார்.

முன்னதாக, கொழும்பில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி முற்றுகையிட்டனர்.

திவால்நிலையை நோக்கிச் செல்லும் இலங்கை, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இதனால் மக்கள் குறைவான இருப்புகளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மே 9 அன்று ஜனாதிபதியின் மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகுவதற்கும் இதேபோன்ற எதிர்ப்புக்கள் தான் வழிவகுத்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment