கோபி அன்னான் மறைவு : ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரான அன்னான் தன்னுடைய 80 வயதில் காலமானார். 1997 முதல் 2006ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார் கோபி அன்னான். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐநாவில் உயரிய பொறுப்பினை வகிப்பது அதுவே முதல் முறையாகும்.
உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அச்செய்தி அவரின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பகுதியில் பதிவிடப்பட்டிருக்கிறது.
கோபி அன்னான் ஆற்றிய பணிகள்
கோபி தன்னுடைய கானா நாட்டினைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகளின் சபையில் ஏழாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
தன்னுடைய பதவி காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை சிறப்பாக செய்ததன் விளைவாக அவருக்கு 2001ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் கூட சிரியாவில் நடைபெற்ற போர் குறித்து ஆய்வு செய்து பல முக்கியமான முடிவுகளை முன்னெடுக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐநாவின் பங்களிப்பு போதிய அளவில் இல்லாத காரணத்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.