France expands free COVID-19 testing as infection rates rise : கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளான ஐரோப்பிய நாடுகளில் ஃப்ரான்ஸ் நாடும் ஒன்று. பெரும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தது அந்நாடு. கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கியது ஃப்ரான்ஸ். ஆனால் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க : ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்கள் எவ்வளவு பேர்? ஏன் வெளியேற விரும்புகிறார்கள்?
இதன் தீவிர போக்கை உணர்ந்து கொண்ட அந்நாட்டு சுகாதாரத்துறை செயலகம், அனைவருக்கும், மருத்துவரின் பரிந்துரை கடிதம் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் கூட கொரோனா பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பி.சி.ஆர். நாசல் ஸ்வாப் டெஸ்ட்டுகள் இலவசமாக அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று சனிக்கிழமை ஃப்ரான்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
1 லட்சத்து 80 ஆயிரத்து 528 நபர்கள் ஃப்ரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 13 வார மருத்துவ போராட்டத்திற்கு பிறகு கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை அந்நாட்டில் 30 ஆயிரத்து 192 நபர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் 2 நாட்களில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஃப்ரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியர் வெரன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil