வீட்டை விட்டு வெளியேறினால் கடும் நடவடிக்கை: காலியாக இருக்கும் ஃபிரான்ஸ் தெருக்கள்!

வெள்ளிக்கிழமை முதல் நான்கு வார காலத்திற்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

By: October 31, 2020, 1:58:57 PM

France’s lockdown to slow the spread of resurgent coronavirus infections : வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஃபிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. 670 லட்சம் மக்கள் வசிக்கும் நாட்டில் எவரும் வீட்டை விட்டு வெளியேறவோ, உறவினர்களை அழைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பலரும் தாங்கள் வாழ்ந்து வரும் நகரங்களில் இருந்து தங்களின் சொந்த கிராமங்கள் மற்றும் ஊர்களை நோக்கி புறப்பட தயாராகினார்கள்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பெரும் பாதிப்பை அடைந்திருக்கும் ஃபிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அங்கிருக்கும் சுகாதார அமைப்பிற்கு பெரும் சுமையாக அமையும் என்பதால் வெள்ளிக்கிழமை முதல் நான்கு வார காலத்திற்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் வர ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு மட்டுமே தெருக்களில் நடமாட இயலும். சில தளர்வுகளும் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய (1 கிலோமிட்டர் சுற்றளவுக்குள்), மருந்துகள் வாங்க, அத்தியாவசிய பொருட்களை பெற போன்றவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீண்டும் மூடப்படுகிறது. உணவை தயாரித்து, டைனிங் முறை இல்லாமல், வழங்கும் பட்சத்தில் அந்த உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:France lockdown to slow the spread of resurgent coronavirus infections

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X