நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மெக்டோர்மண்ட் வாங்கிய சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை திருடி சென்றவர், ஃபேஸ்புக் லைம் மூலம் பிடிப்பட்டார்.
90 ஆவது ஆஸ்கார் விழா நேற்று (5.3.18) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. சிறந்த படைப்புகள், நடிகர், நடிகைகள் என 24 பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது. இதில், திரீ பில்போர்ட்ஸ் படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டோர்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய மகிழ்ச்சியுடன் மெக்டோர்மண்ட் அங்கு நடைபெற்ற பார்ட்டில் கலந்துக் கொண்டார்.
அப்போது, அவரின் விருது சற்று நேரத்திற்குள் காணாமல் போனது. இதனால், கவலையடைந்த மெக்டோர்மண்ட் அழதொடங்கினார். அதன் பின்பு, அங்கிருந்து பாதியிலியே வெளியேறி, காவல் நிலையத்தில் தனது ஆஸ்கார் விருதைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
இந்நிலையில், ஆஸ்கார் பார்ட்டியில் புகைப்பட கலைஞராக பணியாற்றி ஒருவருக்கு, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட டெர்ரி பிரையண்ட் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அவர் பார்ட்டி மீடையில் இருந்து ஒரு ஆஸ்கார் விருதை எடுத்து இது, தனக்கும், தன்னுடைய குழுவிற்கும் கிடடைத்துள்ள விருது என்று புகழ் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்த விருதுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் அடித்துள்ளார். இது பொய் என்று தெரியாத அங்கிருந்த அனைவரும் டெர்ரி பிரையண்ட்க்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
,
இந்நிலையில், அந்த புகைப்பட கலைஞருக்கு, டெர்ரி பிரையண்ட் ஒரு முறை கூட மேடை ஏறவில்லை என்பது தெளிவாக தெரிந்துள்ளது. அதன் பின்பு, இதுக்குறித்து அவர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். பின்பு, டெர்ரி பிரையண்ட்டை அன்று இரவே காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆஸ்கார் விருது, மீண்டும் மெக்டோர்மண்ட்டிடம் உப்படைக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?time_continue=113&v=9uT2ze2hz4g