ஜி20 நாடுகள் உச்சிமாநாட்டின் இறுதி நாளில், தலைவர்கள் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை அடைவதற்கான உறுதிமொழியை ஞாயிற்றுக்கிழமை அளித்தனர். இறுதி அறிக்கையில், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸில் கட்டுப்படுத்துவதற்காக அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த அறிக்கை சில உறுதியான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய 2050ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தேதியைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இது பேரழிவு தரும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கணிசமான அளவு கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு என்ற முந்தைய வரைவில் உள்ள குறிப்புகளை இந்த அறிக்கை நீக்கியுள்ளது. மாறாக, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விரைவான, மிகவும் சாத்தியமான மற்றும் மிகவும் செலவு குறைந்த வழிகளில் ஒன்று உமிழ்வைக் குறைப்பதாக அது அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.
தடுப்பூசி காப்புரிமையை ரத்து குறித்த சர்ச்சையையும் இந்த அறிக்கை தொடவில்லை.
இந்த இறுதி ஆவணம் கார்பன் உமிழ்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றிய தற்போதைய தேசியத் திட்டங்களை அவசியம் ஏற்பட்டால் வலுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு நிலக்கரி மின் உற்பத்திக்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான உறுதிமொழியையும் இந்த ஆவணம் உள்ளடக்கியுள்ளது. “1.5 டிகிரி செல்சியஸ் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் 2 டிகிரி செல்சியஸ் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைவிட மிகக் குறைவு என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழே எட்டுவதற்கு அனைத்து நாடுகளின் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள செயல்களும் அர்ப்பணிப்பும் தேவைப்படும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், இந்த அறிக்கை உள்நாட்டில் நிலக்கரியை படிப்படியாக வெளியே எடுப்பதை நிறுத்துவதற்கான இலக்கை நிர்ணயிக்கவில்லை. இது முன்னணி கார்பன் மாசுபடுத்தும் சீனா மற்றும் இந்தியாவுக்கு தெளிவான அனுமதியாக உள்ளது.
மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளில் நிலக்கரி திட்டங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து விலகிவிட்டன. பெரிய ஆசியப் பொருளாதார நாடுகளும் இப்போது அதையே செய்கின்றன.
ஆனால், உள்நாட்டில் நிலக்கரி ஆலைகளை கட்டுவதற்கு சீனா இறுதி தேதியை நிர்ணயிக்கவில்லை. நிலக்கரி இன்னும் சீனாவின் மின் உற்பத்திக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும், சீனாவும் இந்தியாவும் உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைப்பதற்கான ஜி-20 பிரகடனத்திற்கான முயற்சிகளை எதிர்த்தன.
முன்னதாக, கிளாஸ்கோவில் இன்னும் பெரிய ஐ.நா பருவநிலை மாநாட்டின் தொடக்கத்திற்கான தொனியை அமைக்கும் இந்த வார இறுதியில் உச்சிமாநாட்டின் இறுதி நாளில் உலகளாவிய பருவநிலை மாற்ற நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் போது, ஞாயிற்றுக்கிழமை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் தலைவர்களை பேச வைக்குமாறு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் வலியுறுத்தினார் என்று ஸ்காட்லாந்துடன் இணைந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உண்மையில் கடைசி வாய்ப்பு என்று எச்சரித்த சார்லஸ், ஜி20 தலைவர்களிடம், “உலகளாவிய வெப்பமயமாதலைத் தனிப்பதற்கு பொது - தனியார் கூட்டுறவில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஆண்டு முதலீட்டு தேவையே சுத்தமான நிலையான எரிசக்தி ஆதாரங்களை அடைவதற்கு ஒரே வழி” என்று கூறினார்.
ரோமில் கூடிய தலைவர்கள் மற்றும் பிரதமர்களிடம் சார்லஸ், “உங்களை கிரகத்தின் பொறுப்பாளர்களாகப் பார்க்கும் இளைஞர்களின் விரக்தியான குரல்களைக் கேட்காமல் இருக்க முடியாது” என்று சார்லஸ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.