மகாத்மா காந்தி அணிந்திருந்த தங்க பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி இங்கிலாந்தில் 2,60,000 டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 2.5 கோடிக்கு மேல்) ஏலத்தில் வெள்ளிக்கிழமை விற்பனையானது.
மகாத்மா காந்தி அணிந்திருந்த தங்க பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி இங்கிலாந்தில் 2,60,000 டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 2.5 கோடிக்கு மேல்) வெள்ளிக்கிழமை ஏலத்தில் விற்பனையானது. ஏல நிறுவனத்திற்கு வெளியே ஒரு கடிதம் பெட்டியில் அது கண்டுபிடிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த ஏலம் நடந்துள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது.
பிரிஸ்டலில் வெள்ளிக்கிழமை நடந்த ஏலத்தில் ஆறு நிமிடங்களுக்குள் ஏலம் எடுத்த ஒரு அமெரிக்க நினைவுச் சின்ன சேகரிப்பாளருக்கு மூக்கு கண்ணாடி விற்கப்பட்டது. கிழக்கு பிரிஸ்டல் ஏல நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் தங்கள் கடிதப் பெட்டியில் கண்ணாடியை ஒரு நபர் போட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளனர். இந்த கண்ணாடி உண்மையில் காந்தியால் அவருடைய மாமாவுக்கு பரிசளிக்கப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“என்னுடைய ஒரு சக ஊழியர் அதை எடுத்தார். உறையை திறந்து உள்ளே இருந்த ஒரு சுருக்கமான குறிப்பை படித்தார். அதில், ‘இந்த கண்ணாடி காந்திக்கு சொந்தமானது. எனக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்’என்று ஏலதாரர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஸ்டோவ் ஸ்கை நியூஸிடம் கூறினார். “நான் அந்தக் குறிப்பைப் படித்தேன். காலை கடமைகளைச் செய்த பின்னர் மதிய உணவு நேரத்தில், சரி இந்த மனிதனுக்கு அழைப்பு விடுங்கள், கதை என்னவென்று பார்ப்போம் என்று நினைத்தேன்” என்று கூறினார்.
1920களில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றபோது காந்தியின் மாமா கண்ணாடியை பரிசாகப் பெற்றுள்ளார். அதற்குப்பின், விற்பனையாளரின் குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக இந்த கண்ணாடி மாறி வந்துள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது. காந்தி தனது தனிப்பட்ட பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு அல்லது அவருக்கு ஏதாவது உதவி செய்தவர்களுக்கு அளிப்பார் என்று அறியப்படுகிறது.
இந்த கண்ணாடி சுமார் 15,000 யூரோக்களுக்கு (இண்டிய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்துக்கு மேல்) விற்கப்படும் என்று ஏலதாரர்கள் முதலில் மதிப்பிட்டனர். அவர்கள் இறுதியாக மதிப்பிடப்பட்ட விலையைவிட கிட்டத்தட்ட 20 மடங்குக்கு அதிகமாக விற்பனை செய்தனர். இது ஏல இல்லத்தின் மிகப்பெரிய விற்பனையை குறிக்கிறது.
“இந்த கண்ணாடி ஐம்பது ஆண்டுகளாக ஒரு மேஜை டிராயரில் கிடக்கின்றன. விற்பனையாளர் அது ‘நல்லது இல்லை’ என்றால் அதை தூக்கி எறியுங்கள் என்று சொன்னார்கள். இப்போது அவர் வாழ்க்கையையே மாற்றும் தொகையைப் பெறுகிறார்” என்று ஸ்டோவ் பிபிசியிடம் கூறினார்.
2009 ஆம் ஆண்டில், மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் 1.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ .9.3 கோடி) மதிப்புள்ள பல தனிப்பட்ட பொருட்களை வாங்கினார். ஒரு ஜோடி கண்ணாடி, ஒரு ஜோடி அணிந்த தோல் செருப்புகள், ஒரு பாக்கெட் கடிகாரம் மற்றும் ஒரு எளிய பித்தளை கிண்ணம் மற்றும் தட்டு உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்.
ஏலத்தை நிறுத்தும் முயற்சியில், டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமல்படுத்த இந்திய அரசு விரைவக அமெரிக்க நீதித்துறையை அணுகியது. இருப்பினும், ஏலதாரர் பொருட்களை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இறுதியாக, மல்லையா நாட்டிற்காக ஏலம் எடுப்பதாகக் கூறி நினைவுச் சின்னங்களை வாங்கினார்.
1800களின் பிற்பகுதியிலும் 1900களின் பிற்பகுதியிலும் இங்கிலாந்தில் சட்டம் படித்த காலகட்டத்தில் காந்தி சின்னமான வட்ட பிரேம் கொண்ட வின்ட்சர்-பாணி கண்ணாடிகளுக்கு மாறினார்.
ஆரம்பத்தில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் காந்தியின் ஒத்துழையாமை போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தின் போது கண்ணாடிகள் ஒரு வழக்கமான அம்சமாக மாறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.