ஜார்ஜியாவில் உள்ள ஒரு உணவகத்தில் 12 பேர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் இறந்த 12 பேர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக ஜார்ஜியாவில் உள்ள மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உணவகத்தில் 12 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவருமே இந்த விடுதியின் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவருமே தங்கள் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில, அவர்களின் உடல்களில் காயங்கள் இல்லை என்றும், அவர்கள் தங்கியிருந்த அறை அருகிலேயே ஜெனரேட்டர் ஒன்று திறந்தவெளியில் அல்லாமல், மூடிய அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந் தேதி இரவு மின்வெட்டு ஏற்பட்டதால், ஜெனரேட்டர் தானாக இயங்கி, மின்சாரம் வந்தவுடன் தானாக ஆஃப் ஆகியுள்ளது.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அறையில். கார்பன் மோனாக்சைடு விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படுவதால் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திபிலிசியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று (டிசம்பர் 16) வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஜார்ஜியாவின் குடாரியில் 11 இந்தியர்கள் இறந்ததாகவும், ஸ்கை ரிசார்ட்டில் இந்திய உணவு உணவகம் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜார்ஜியாவில் இறந்த 12 பேரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்று அமிர்தசரஸின் காங்கிரஸ் எம்பி குர்ஜித் சிங் அவுஜ்லா கூறினார். "ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் கார்பன் மோனாக்சைடு விஷம் கலந்ததால், இறந்ததாக சந்தேகிக்கப்படும் 12 பேரும் பஞ்சாபியர்கள். முதல்வர் பகவந்த்மான் & குல்தீப் சிங்ஹாப் என்ஆர்ஐ அமைச்சர் ஆகியோர் இறந்தவர்களின் உடல்களைத் இந்தியா கொண்டு வரவும், துயரப்படும் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திபிலிசியில் உள்ள இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு உடனடியாக திருப்பி அனுப்ப உதவுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், மேலும் எங்களால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு அனைத்து ஆதரவையும் கொடுப்போம் என்று கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.