ஜப்பான் ஆழிப்பேரலை நினைவு தினம்; முற்றிலும் கைவிடப்பட்ட புகுஷிமா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இங்கே குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட போதும் 1600 நபர்கள் மட்டுமே இங்கே குடியேறியுள்ளனர்.

Ghost Towns of Fukushima Remain Empty After Decade-Long Rebuild : 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அன்று சுனாமி, பூகம்பம் மற்றும் அணு உலை வெடிப்பு போன்ற பெரும் விபத்துகளை ஒரே நேரத்தில் சந்தித்தது ஜப்பானின் புகுஷிமா.

பத்து வருடங்கள் ஆகியும் புகுஷிமா இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. ஆயிர கணக்கில் ஜப்பான் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும், பில்லியன் கணக்கில் அந்நகரை மீள் உருவாக்கம் செய்ய பணம் முதலீடு செய்த போதும் மக்கள் அங்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். செயலிழந்த புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையத்தை நீக்குவதற்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் அருகே மில்லியன் கணக்கான கேலன் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

நாமியில் வைக்கப்பட்டுள்ள நடுக்கல்லில் உயிரிழந்த 200 நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 8 கி.மீ அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த பகுதியில் இருந்து 21000 பேர் வெளியேற்றப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இங்கே குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட போதும் 1600 நபர்கள் மட்டுமே இங்கே குடியேறியுள்ளனர். புதிய வீடுகள், பழுதடைந்த சாலைகளை சீர் படுத்துதல் என்று மொத்தமாக 300 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ghost towns of fukushima remain empty after decade long rebuild

Next Story
ஃபிரான்ஸின் மிக இளவயது அதிபர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com