கொரோனா வைரஸால் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் இத்தாலியர்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அவதிக்கு ஆளான ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று.

Giving hope, and a place to mourn: Memorials to the pandemic

Giving hope, and a place to mourn: Memorials to the pandemic : ஞாயிறு அன்று தெற்கு மிலானுக்கு அருகே 35 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொடொக்னோவில் நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள்.

உள்ளூர் தலைவர்கள், ராணுவ வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அவதிக்கு ஆளான ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று.

நினைவிடத்தில் குயின்ஸ் மரமும், மூன்று பிரிவுகளைக் கொண்ட சிலையும் வைக்கப்பட்டு அதில் நம்பிக்கை, சமூகம், மீண்டு எழுதல் ஆகியவற்றை எழுதியுள்ளனர். கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்காக அந்நாட்டில் வைக்கப்பட்டிருக்கும் முதல் நினைவு இடமாகும்.

கொடோக்னாவில் தான் 38 வயது மிக்க ஒருவர் கொரோனா வைரஸிற்கு ஆளானார். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அவர் தான். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நாளின் முதலாம் ஆண்டு நினைவு தினமாக ஞாயிறு அன்று அம்மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஞாயிற்றுக் கிழமை மட்டும் இத்தாலியில் கொரோனா வைரஸால் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக இத்தாலி அரசு தெரிவிக்கின்ற நிலையில், நினைவகங்கள் மிக விரைவாக வைக்கப்பட்டு வருகின்றன என்று பலரும் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர். இத்தாலி மட்டும் இல்லாமல் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் வைக்கப்படுகிறது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Giving hope and a place to mourn memorials to the pandemic

Next Story
பாங்காக்: சாலையோர உணவகங்களுக்கு தடையில்லை… சுகாதாரமான உணவு வழங்க அட்வைஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com