Advertisment

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - இலங்கை அதிபர்

அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பதிலாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
Gotabaya Rajapaksa

Gotabaya promises to engage Tamil diaspora : யுத்தகாலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கான பொறுப்புகூறல் மற்றும் நீதி தொடர்பாக இலங்கையில் நிலவும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பதிலாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

76வது ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ராஜபக்‌ஷ. ஐ.நா. தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐ.நா. பொதுச் செயலாளார் ஆண்டனியோ கட்டரஸை சந்தித்து பேசினார். அப்போது உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாக இலங்கையின் உள்நாட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். புலம் பெயர்ந்த தமிழர்கள் இது தொடர்பாக அழைக்கப்படுவார்கள் என்று அவருடைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு புலம் பெயர் தமிழர்களின் அமைப்புகளுக்கு தடை விதித்து. அவர்களின் உறுப்பினர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியத கோத்தபயவிடம் இருந்து வந்துள்ள இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது. ராஜபக்ஷவின் நிர்வாகம். இந்த குழுக்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளார்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது.

கோத்தபயவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று உலக தமிழ் ஃபோரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளார் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். இந்த அமைப்பு வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள புலம் பெயர் தமிழ் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதிபரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போது அற்ப காரணங்களை காட்டி அவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்காவில் இருந்து, புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.ஜி.டி.எஃப். உள்ளிட்ட தமிழ் அமைப்புகளை தடை செய்த பின்னர் இப்படி ஒரு மனமாற்றம் எப்படி திடீரென ஏற்பட்டது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

ஜூன் மாதம் ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து பேச திட்டமிட்டார். 88 வயது மூத்த தலைவரான சம்பந்தன் தலைமையிலான இந்த கூட்டணியுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பல தரப்பில் இருந்தும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆலோசனைக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பதை கூறாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய பாராளுமன்ற குழுவான தமிழ் தேசிய கூட்டணி, அடிப்படை அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் தமிழர்களின் கேள்விகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில், அரசியல் வட்டாரங்கள் தமிழ் மக்களுடன் அதிபரின் சாத்தியமான கலந்துரையாடலில் நம்பிக்கைக்கான சிறிய காரணத்தைக் கண்டுள்ளர். மூத்த பத்திரிக்கையாளர் தனபால் சிங்கம் இந்த அறிவிப்பை ஒரு திசைதிருப்பும் முயற்சி என்றூ கூறினார். இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான அழைப்பை தமிழ் புலம்பெயர் குழுக்கள் ஆதரித்து வந்தாலும், அவை ஒருங்கிணைந்த அரசியல் சக்திகள் அல்ல . அவர்களை இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக நீங்கள் கருத முடியாது. அவர்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு சென்று அங்கே குடியுரிமை பெற்ற மக்கள் என்று அவர் கூறினார்.

சர்வதேச சமூகத்தினர் இந்த விவகாரம் தொடர்பாக அழுத்தம் தர புலம்பெயர்ந்த தமிழர்களையே இலங்கையில் வாழும் தமிழர்கள் நம்பியுள்ளனர். ஆனால் நாட்டிற்குள் தமிழ் குரல்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிபர் தயங்க்ம் போது தோன்றும்போது, ​​புலம்பெயர்ந்தோருடன் அவர் என்ன பேச முடியும்? என்று தி இந்து நாளேட்டிற்கு தன்பால்சிங்கம் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

புலம்பெயர் மக்கள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவைப் பெற முயற்சித்தாலும், அவர்கள் ஒருபோதும் அரசியல் தீர்வை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனம் சார்ந்து எழுந்த பிரச்சனைக்கு அதிபர் முதலில் தமிழ் பிரதிநிதிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிகளுக்குள்ளும் கருத்து ஒற்றுமை இல்லை. அரசிடம் ஒத்திசைவான பார்வையுடன் அணுகும் இடத்தில் அவர்கள் இல்லாமல் இருப்பது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment