இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை எதுவும் செய்யாது: கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும், அண்டை நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டேன்...

இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும், அண்டை நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்றும் கூறினார். இந்தியாவுடனும் சீனாவுடனும் மிகவும் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக பேசிய கோத்தபய ராஜபக்ச இலங்கை ஒரு நடுநிலை நாடாக இருக்க விரும்புவதாகக் கூறினார்.

“நாங்கள் எல்லா நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எந்த விஷயத்திலும் வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை. இந்திய கவலைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு செயலிலும் நாங்கள் ஈடுபட முடியாது.” கோத்தபய ராஜபக்ச ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நவம்பர் 29 ஆம் தேதி கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோத்தபய முகாம் விரைவாக இந்தியாவை சென்றடைந்தது. மேலும், சீனா ஒரு வர்த்தக கூட்டாளியாக இருக்கும் போது, இந்தியா எங்கள் உறவினர் என்று தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் ஒரு நடுநிலை நாடாக இருக்க விரும்புகிறோம். வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் நாங்கள் செல்ல விரும்பவில்லை… நாங்கள் மிகச் சிறியவர்கள். இந்த சமநிலைப்படுத்தும் செயல்களில் இறங்கி எங்களால் நிலைக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் போர்க்கால பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ச, தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சீனாவுடன் இலங்கையின் ஈடுபாடு முற்றிலும் வணிகரீதியானது என்றார். “இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை இங்கு வந்து முதலீடு செய்ய அழைக்கிறேன். சீனாவை மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்காதீர்கள்” என்றும் அவர் கூறினார்.

ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான முந்தைய அரசாங்கத்தின் தவறு என்றும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோத்தபய ராஜபக்ச கூறினார்.

“இந்த ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். முதலீட்டிற்கு ஒரு சிறிய கடனைக் கொடுப்பது வேறு விஷயம். ஆனால், ஒரு உத்தியாக முக்கியமான பொருளாதார துறைமுகத்தை வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“முதலீடுகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்” என்று கோத்தபய ராஜபக்சா கூறினார்.

2017 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை கடனுக்கு ஈடாக கையகப்படுத்திய சீனா, இலங்கைத் தீவு தேசத்துடனான தனது உறவை வளர்த்துக் கொண்டு, டிஜிபூட்டியில் நிறுவப்பட்ட ராணுவத் தளவாட தளத்துடன் இந்தியப் பெருங்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close