இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவுடன் நெருக்கத்தை எதிர்பார்க்கிறார்

டெல்லியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வலுவான வலையமைப்பு உள்ளது

அவரின் இரட்டை மாடி வீட்டின் முன்பு நண்பர்களும், குடும்ப உறவுகளும் திரள ஆரம்பித்த போது, தேர்தல் முடிவு நமக்கு தெளிவாக தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமை , வீட்டின் வெளியே சத்தங்கள் அதிகமாக இருந்தாலும், முந்தைய நாள் இரவில் தேர்தல் செய்திகளை கண்விழித்து பார்த்திருந்தாலும்,  ஞாயிற்றுக்கிழமை மதியம்  வீட்டின் வெளியே திரண்டிருந்த  மக்களை சந்தித்த பின் சிறு தூக்கத்தையும் எடுத்துக் கொண்டார். இறுதியாக, அன்று மாலையே கோத்தபய ராஜபக்ஷ அதிபர் தேர்தலில் வெற்றி என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பின்பு விட்டுமுன்பு நின்றிருந்த மக்களின் முன்பு வருங்கால அதிபராய் காட்சியளித்தார்.

52 சதவீத வாக்குகளைப் பெற்ற கோத்தபய ராஜபக்ஷ தனது ட்விட்டரில் ,”இலங்கைக்கான ஒரு புதிய பயணத்தை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம்,இந்த பயணத்தில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றாக பயணிக்கப்பட வேண்டியவர்கள்,” என்ற பதிவையும் செய்தார்.

இதற்கிடையில், அவரன் ஆதரவாளர்கள் இந்தியாவை விரைவாக அணுகி, ” சீனா நாட்டை  ஒரு வர்த்தக பங்காளியாக பார்க்கவிருக்கின்றோம், ​​இந்தியா என்றைக்குமே எங்கள் உறவினர் தான் என்ற கருத்தையும் தெரிவித்தது.

இந்த கருத்தை செயலாக்கும் விதமாக, ஆண்டாண்டு  காலமாக இந்தியா- இலங்கையின்  இணைப்பின் அடையாளமாக அறியப்பட்ட  பாரம்பரிய நகரமான ‘அனுராதபுரத்தில் ‘தனது பதவியேற்பு விழா நடத்துகிறார். பொதுவாக, அதிபர் பதவி ஏற்புவிழா கொழும்பில்  அமைந்திருக்கும் பாரம்பரிய இடமான சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

பிரதமர் நரேந்திர மோடியின் டெல்லி அலுவலகம், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ” என்று பதிவு செய்துள்ளது. மேலும், கோத்தபய ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தரும் தருணத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாக மோடி கூறியதாகவும் அந்த ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.

 

கோத்தபயாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழிடம் தெரிவிக்கையில், இந்தியாவுக்கு ஒரு “ஆரோக்கியமான பங்காளியாக” கோத்தபய இருப்பார், தனது தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்று இந்தியா தற்போதைய அரசாங்கத்தை நம்பியது. ஆனால், தற்போதைய அரசு இலங்கையின் நலன்களை பாதுகாக்கத் தவறியதோடு மட்டுமல்லால், இந்தியாவுக்காக எதையும் செய்யவில்லை. தற்போது, இலங்கைக்கு வலுவான ஜனாதிபதி கிடைத்திருப்பதால், தனது சொந்த நாட்டின் சுதந்திரத்தையும் சுயாட்சியையும் பாதுகாக்கும் அதே வேளையில் இந்தியாவுடனான நெருக்கமும் உறுதி செய்யப்படும் ”என்று  தெரிவித்திருகின்றன.

2015ம் ஆண்டில், இலங்கை சீனாவுடன் நெருக்கம் அதிகமானதாக உணரப்பட்டது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியற்ற மஹிந்தா ராஜபக்சே, “தேர்தல் தோல்வியின் பின்னணியில் இந்தியாவுக்கு பங்கு உண்டு”என்று குற்றம்  சாட்டியிருந்தார்.

2018ம் ஆண்டில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ராஜபக்சே மீது இந்தியா அலட்சியமாக இருந்தது என்று கோத்தபய ராஜபக்சே குற்றம் சாட்டியிருந்தார். இருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்தியாவின் மனநிலையில் நிறைய மாற்றங்கள்  ஏற்பட்ததை  இலங்கை உணருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“இப்போது ஆரோக்கியமான உறவு இருக்கிறது. முன்னதாக, கொழும்பில் உள்ள இந்திய அதிகாரிகள் எங்களை சந்திக்க தயங்கினர். இப்போது கோத்தபயாவுக்கும், டெல்லிக்கும் இடையே ஒரு அன்பான உறவு உருவாகிவருகிறது. சீனா எங்கள் வர்த்தக பங்காளி, இந்தியா எங்களின் நெருங்கிய உறவினர் என்று இலங்கை நெடுநாளாக பின்பற்றும் அதே கொள்கையைத்தான் கோத்தபய நடைமுறைப்படுத்துவார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

கோத்தபய ராஜபக்சே, இந்தியாவுடன் மிகவும் நல்லுறவைப்   பேணுவார் இலங்கை முன்னாள் வெளியுறவு செயலாளர் பாலிதா கோஹோனா  தெரிவித்துள்ளார். நாங்கள் நாட்டை முன்னேற்ற வழியில் கொண்டு செல்வதற்கான அவசரத்தில் இருக்கிறோம். யார் வேண்டுமானாலும் இங்கு முதலீடு செய்யலாம். இந்தியாவுடன் ஒரு சிறப்பு உறவைப் பேணுவதே எங்கள் முதல் முன்னுரிமை என்றாலும் , சீனா,அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்ற ஒவ்வொரு நாடுகளிலும்  வர்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம்,”என்று கூறினார்.

உள்நாட்டு போரின் போது தொடர்பாக இந்தியாவுக்கு போரைப் பற்றி எடுத்துரைக்க அப்போதைய ஜனாதிபதி மஹிந்தாவால் நியமிக்கப்பட்ட மூவரில் கோத்தபய ராஜபக்சேவும் ஒருவர். டெல்லியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கோத்தபய வலுவான வலையமைப்பு உள்ளது. இந்தியாவுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதால் தான்  நீண்ட நாள் போரை இலங்கையால்  முடிக்க முடிந்தது. அவர் இந்தியாவுடன் மிகவும் நல்லுறவைப் பேணுவார், மேலும் இலங்கை மண்ணை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தமுடியாது என்பதை உறுதி செய்வார் ”என்று ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளிநாட்டு விவகாரங்களில் முக்கிய ஆலோசகராக இருக்கும் கோஹோனா தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில்  83.73 சதவீத இலங்கை மக்கள் வாக்களித்தனர். இருந்தாலும், கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி சிங்கள புத்திஸ்ட்  சமூகத்தின் பெரும்பான்மையால் தான் கிடைத்தது.

சமூகம் அமைதியின்மைக்கு வழிவகுத்த இலங்கை உயிர்ப்பு ( ஈஸ்டர்) ஞாயிறு குண்டுவெடிப்புகள் நடந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு அதிபர் தேர்தல் நடந்த நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்த கோத்தபயாவின் அழுத்தம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது.

ஆரம்பத்தில் சேகரிக்கப்பட்ட பிராந்திய வாரியான கருத்துக் கணிப்புத் தகவல்களின் படி , கோத்தபய சிங்களர்கள் அதிகமாக வாழும் தென்பகுதிகளான  ஹம்பன்டோட்டா மற்றும் மாதாரா இடங்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.  இதற்கு நேர்மாறாக, சஜித் பிரேமதாச தமிழ் மற்றும் இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை , மட்டக்களப்பு  பகுதிகளில்  70-80 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

முன்னாள் இராணுவ ஜெனரலாக இருந்த கோத்தபய ராஜபக்சே, புலிகளுடன் உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். விரைவில், அவர் நாட்டின் மிக சக்திவாய்ந்தவராகவும் , அச்சத்தை உருவாக்கும் மனிதராகவும்  வர்ணிக்கப்பட்டார்.  அரசை விமர்சிக்கும் விமர்சகர்கள் காணாமல் போனது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் அவரின் பெயர் நன்கு உச்சரிக்கப்பட்டது.  மேலும் 2014 ல் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடைய தீவிர அமைப்பான போடு பாலா சேனாவுக்கு ஆதரவளித்ததாகவும் கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close