க்ரீட்டா தென்பர்க். கடந்த 2018ம் வருடம் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்ட அமெரிக்க பெண். அப்போதே அதில் அதிகம் ஆர்வம் காட்டாத இவர் கடந்த வருடம் தனக்கு கிடைத்த உலக வெப்பமயமாதல் குறித்த ஆராய்ச்சிக்கான மிகப் பெரிய விருதையும் வேண்டாம் என உதறித்தள்ளி இருக்கிறார். இதற்கு இவர் சொன்ன காரணங்களும் வித்தியாசமானவை.
தற்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் க்ரீட்டா தென்பர்க் உலக அளவில் உலக வெப்பமாதல் குறித்து போராட்டங்கள் நடத்தி பிரபலமானவர். கடந்த வருடம் இவரது ஆராய்சிகளுக்காகவும், இவர் மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வுகளுக்காகவும் சுவீடன் அரசு இவருக்கு விருது அளிக்க முன்வந்தது. அனால் இவர் அதை ஏற்க வில்லை. சொன்ன பதிலும் வித்தியாசமானது. .இந்த விருது எனக்கு தேவையில்லை. இந்த விருதை பெற சுவீடன் தலைநகரான ஸ்டாக் ஹொம் வரை செல்லவும் நான் விரும்ப வில்லை என்பது தான்.
அனால் இதே விருதை ஸ்டாக் ஹொம் சென்று அடைந்த சோபியா மற்றும் இசபெல்லா விருதை மறுத்த க்ரீட்டா தென்பர்க் பற்றி கூறும் போது அதன் காரணத்தை பதிவிட்டுள்ளார். அதாவது மக்களுக்கு உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தனது கடமை என்றும் இதில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எனது ஆராய்ச்சி குறித்து என்ன அக்கறை என்று க்ரீட்டா தென்பர்க் சொன்னதாகவும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளனர். சுவீடன் அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி இந்த விருது மதிக்கத் தக்கது என்று கூறிய பின்பும், விருதை உத்தரித் தள்ளிய இந்த 16 வயது பெண்ணின் கடமையும், விருது என்பது அரசியல்வாதிகளின் ஒரு பொழுது போக்கு என்று கூறியதும் க்ரீட்டா தென்பர்க்கின் தன்னலமற்ற சேவையை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
தமிழில் : த.வளவன்