h-1b visa in usa : அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டு காலம் எச்1 பி விசாவை நீட்டித்து கொள்ளலாம்.
இவ்வாறு 6 ஆண்டு பணிபுரிந்த பிறகு அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்றுவதற்கான கிரீன் அட்டையை அவர்கள் பெற முடியும். இதனால் அமெரிக்காவில் எச்1 பி விசாவுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு.
பெரும் எண்ணிக்கையில் எச்-1 பி விசா கோரி விண்ணப்பிக்கிற, அமெரிக்காவில் கிளைகள் வைத்துள்ள இந்திய ஐ.டி. கம்பெனிகளுக்கு இதனால் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்பதையும், அமெரிக்காவுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களை பாதிக்கும் என்பதையும் கடந்த கால அனுபவம் காட்டியது.
எச்-1 பி விசா என்பது அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா அல்ல. மாறாக, அடிப்படை தகவல் தத்துவ மற்றும் தொழில்நுட்ப வல்லமை தேவைப்படும் சிறப்புப் பணிகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்க கம்பெனிகளில் வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்கும் விசா ஆகும். ஆண்டு தோறும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுக்க அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் இந்த எச்-1 விசா பெற்றவர்களைத்தான் நம்பி இருக்கின்றன.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியா - அமெரிக்கா இடையான வர்த்தக போக்குவரத்து மந்தமாக இருந்து வருகிறது. அதுமட்டிமில்லை அண்மையில் அமெரிக்கா இந்தியாவை வர்த்தக்க நாடுகளில் பட்டியலில் இருந்தும் நீக்கியது. இதனால் இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வரியை உயர்த்தி அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது அமெரிக்கா எச்1பி விசா வழங்குவதற்கான கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை மேலும் அதிகரித்துள்ளது. இதில் குடும்பத்திற்கான விசா வழங்குவதலும் அடங்கும்.
கடந்த ஆண்டில் ‘எச்1 பி’ விசா பெறுவோர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.வழக்கமாக மற்ற நாடுகளுக்கு விசா வழங்குவதில் இருக்கும் 15 சதவீதத்தை 10%வரை குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அதிகப்படியாக இந்தியர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படுவர்.