கொரோனா தடுப்பு மருந்துக்கு தேவைப்படும் சுறாக்கள்; 5 லட்சம் டார்கெட்!

துணை மருந்துகளில் 5 தடுப்பு மருந்துகள் சுறா ஸ்குவாலீன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது

Half a million sharks may be killed to make Covid-19 vaccine say experts
Half a million sharks may be killed to make Covid-19 vaccine say experts

கலிஃபோர்னியாவை சேர்ந்த ஷார்க் அல்லீஸ் (Shark Allies) என்ற நிறுவனம், உலகில் இருக்கும் மொத்த மக்கள் தொகையினருக்கும் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றால் 5 லட்சம் சுறாக்களிடம் இருந்து கல்லீரல் எண்ணெயை பெற வேண்டும் என்று கூறியுள்ளது.   கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், அதில் பயன்படுத்த ஸ்குவாலின் என்ற தடுப்பு மருந்துகளை பயன்படுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஸ்குவாலீன் என்ப்பது சுறாவின் கல்லீரல் எண்ணெயில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கை கரிமமாகும். இது தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இம்மருந்தினை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் படி 176 தடுப்பூசிகளில் 17 தடுப்பூசிகளுக்கு துணை மருந்தும் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த துணை மருந்துகளில் 5 தடுப்பு மருந்துகள் சுறா ஸ்குவாலீன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

MF59 என்ற துணை மருந்தில் 9.75 மி.கி. ஸ்குவாலீன் அளவை பெற்றுள்ளது. உலகில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இம்மருந்து தேவைப்படும் எனில் 2 லட்சம் சுறாக்கள் கொல்லப்படலாம். அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட மேலும் டோஸ்களின் அளவு இரட்டிப்பாக்கப்பட்டால் கிட்டத்தட்ட 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Half a million sharks may be killed to make covid 19 vaccine say experts

Next Story
போட்ஸ்வானாவில் பலியான 300க்கும் மேற்பட்ட யானைகள்! இறப்பிற்கு இது தான் காரணம்Botswana Mystery elephant deaths caused by cyanobacteria
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com