Advertisment

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலி... உறுதிப்படுத்திய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஹமாஸ் இயக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Hamas chief Yahya Sinwar killed in Israeli strike in Gaza Tamil News

ஆகஸ்ட் மாதம் தெஹ்ரானில் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யாஹ்யா சின்வார் ஹமாஸின் புதிய தலைவரானார்.

தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. யாஹ்யா சின்வார் அக்டோபர் 7, 2023 இல் காசா போரைத் தூண்டிய தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. 

Advertisment

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஹமாஸ் இயக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கொல்லப்பட்டது ஹமாஸ் தலைவரா என்பதை அறிய இஸ்ரேலிய போலீசார் பல் மற்றும் டி.என்.ஏ ஆதாரங்களை ஆய்வு செய்தனர். அவர்களைக் குறிவைத்து தாக்கப்பட்ட கட்டிடத்தில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Hamas chief Yahya Sinwar killed in Israeli strike in Gaza

இந்த தாக்குவதால் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் படுகொலை குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுளளது. அவரது மரணம் குறித்து இஸ்ரேல் அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்ததுடன், அவரது சடலம் என்னவாக இருக்கும் என்று புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தெஹ்ரானில் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யாஹ்யா சின்வார் ஹமாஸின் புதிய தலைவரானார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் அவர் பொது வெளியில் காணப்படவில்லை. மேலும் காஸாவிற்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளின் பரந்த வலையமைப்பில் அவர் மறைந்திருப்பதாக நம்பப்பட்டது. 

கடந்த மாதம், ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவையும், குழுவின் ராணுவப் பிரிவின் உயர்மட்டத் தலைமையையும் இஸ்ரேல் கொன்றது. உளவுத்துறை மதிப்பீட்டிற்குப் பிறகு ஜூலை 13 அன்று காசாவின் கான் யூனிஸ் பகுதியில் போர் விமானங்கள் தாக்கியதில் ஹமாஸின் ராணுவப் பிரிவின் தளபதி டெய்ஃப் கொல்லப்பட்டார்.

ஹமாஸின் துணை இராணுவத் தளபதி மர்வான் இசா மார்ச் மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. டெய்ஃப் மற்றும் சின்வாருடன் இணைந்து இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியேவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் துணை ஹமாஸ் தலைவர் சலே அல்-அரூரி ஜனவரி 2 அன்று கொல்லப்பட்டார். ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸின் நிறுவனராகவும் அரூரி இருந்தார். 

ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்றது மற்றும் 250-க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக காசாவிற்குள் அழைத்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேலின் தாக்குதல் நடத்தி 2,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் காசாவின் பெரும்பகுதி இடிபாடுகளாக மாறியுள்ளது. அதனால், பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Israel gaza hamas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment