டெளன்டவுன் ரமல்லாவில் உள்ள அல்-மனாரா சதுக்கத்தில், சாலையின் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டிருக்கும் பிக்-அப் டிரக் ஒரு மையப் புள்ளியாக உள்ளது, ஒலிபெருக்கிகளில் தேசபக்தி பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன.
பாலஸ்தீனியர்களின் ஒரு குழு அதைச் சுற்றி, காசா மக்களுடன் ஒற்றுமையுடன் கூடுகிறது.
வியாழக்கிழமை நண்பகல், சூரியன் பிரகாசமாக இருக்கிறது. நான்கு கல் சிங்கங்களுக்கு பெயர் பெற்ற ரவுண்டானாவில் வாகனங்கள் நிரம்பி வழிவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், அவசரமான பயணிகளுக்கு மத்தியில், ஆண்களும் பெண்களும் மெதுவாக டிரக்கைச் சுற்றி திரண்டனர்.
உள்ளூர்வாசி ஒருவர் இசைக்கப்படும் தேசபக்தி பாடல் ஒன்றின் வரியை மொழிபெயர்த்தார். நேரம் செல்ல செல்ல கூட்டம் பெருகுகிறது. அவர்களில் பலர் பாலஸ்தீனியக் கொடியை அசைக்கிறார்கள், சிலர் ஆளும் ஃபத்தா கட்சியின் மஞ்சள் ரிப்பனை தங்கள் கைகளில் அணிந்துள்ளனர்.
அவர்கள் குண்டுத் தாக்குதல்களை இஸ்ரேஸ் நிறுத்துமாறு, ஒன்றாக கோஷங்களை எழுப்பினர்.
30 வயதான ஹம்சா உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார்.
அவரிடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல்கள் பற்றி கேட்டதற்கு, ‘நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம், இது எங்கள் தாய்நாடு... பொதுமக்கள் கொல்லப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம், ஆனால் காஸா மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் தியாகிகள் உள்ளனர்’, என்றார்.
சதுக்கத்தின் ஒரு மூலையில் ஆண்களுக்கான ஆடைகள் விற்கும் கடை உள்ளது. உள்ளே, 30 வயதிற்குட்பட்ட, அதன் உரிமையாளர்களில் ஒருவர் இருந்தார். அவர் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அங்கு போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், அவர் கூறுகிறார்: ’நிலைமை மோசமாகப் போகிறது... அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பயணம் கூட மோசமாக உள்ளது. பயத்தில், மக்கள் ஏற்கனவே உணவை சேமிக்க தொடங்கியுள்ளன’ர்.
பாலஸ்தீனிய நேஷனல் இன்ஷியேட்டிவ் தலைவரும் மேற்குக் கரையில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதியும் ஆன முஸ்தபா பர்கௌதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்: “வரலாறு அக்டோபர் 7 இல் இருந்து தொடங்குவதில்லை. பல பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய குடிமக்கள், பொதுமக்கள் இறந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், அதே சமயம் அக்டோபர் 7ம் தேதி என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும்.
மேற்குக் கரையில், இஸ்ரேலிய ராணுவம், இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றக்காரர்களுடன் சேர்ந்து, பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக ஒரு கூட்டுப் பயங்கரவாத பிரச்சாரத்தை நடத்தி வந்தது, இது காஸாவில் போர் தொடங்குவதற்கு முன்பே 40 குழந்தைகள் உட்பட 248 பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
ஹமாஸ் இந்த எல்லா விஷயங்களிலும் தலையிட்டு பதில் சொல்ல முயன்றது, மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது... ஆனால் அன்றிலிருந்து, காஸாவில் இஸ்ரேல் இப்போது செய்வது ஒரு எதிர்வினை அல்ல, அது ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, இஸ்ரேல் வாய்ப்புக்காகக் காத்திருந்திருக்க வேண்டும்.
தங்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்,... பயங்கரமான போர்க்குற்றங்களை நடத்துகிறார்கள். இந்த போர்க்குற்றங்கள் பாலஸ்தீனியர்களை மனிதாபிமானமற்றதாக மாற்றுவதற்கான ஒரு பெரிய பிரச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்தன, என்கிறார் பாலஸ்தீனத்தின் முன்னாள் தகவல் அமைச்சர் பர்கௌடி.
Read in English: In West Bank, the other half of Palestine, there’s worry, scramble for food
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“