இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முத்தாய்ப்பான ஹவுடி மோடி நிகழ்ச்சியில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள், டிரம்ப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்கள் மட்டுமல்லாது, மற்றுமொரு ஆச்சரியமும் நிகழ இருக்கிறது. உலக புகழ்பெற்ற பாப் இசை பாடகியான டெய்லர் சுவிப்டின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில், இந்த நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு கூடும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு இந்த இசை நிகழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைவருக்காக, அமெரிக்க மண்ணில் இவ்வளவு பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. போப் பிரான்சிஸிற்கு கூட இந்த அளவிற்கு பார்வையாளர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பங்கேற்பு : ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்க உள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்சசியில் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெறுகிறார். 2020ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கினை பெறும்நோக்கில், டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி ஸ்டேடியம்
நிகழ்ச்சி நிரல் ( இந்திய நேரப்படி)
22ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஸ்டேடியம், பார்வையாளர்களின் வருகைக்காக திறக்கப்படும்.
பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இரவு 11 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுறும்.
எந்தெந்த மொழிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது?
ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சி, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
யூடியூப் லைவ்ஸ்டிரீமிங் உண்டா?
‘Howdy, Modi!’ யூடியூப் சேனலில், இந்த நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.
&feature=youtu.be" rel="noopener" target="_blank">ஹூஸ்டனில் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாக காண...
&feature=youtu.be" rel="noopener" target="_blank">ஆங்கிலத்தில் ஹவுடி மொழியினை காண
&feature=youtu.be" rel="noopener" target="_blank">இந்தி மொழியில் நிகழ்ச்சியை காண
&feature=youtu.be" rel="noopener" target="_blank">ஸ்பானிஷ் மொழியில் நிகழ்ச்சியினை காண
ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பதன் மூலம், இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் . உலகின் பழமையான அதேசமயம் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுளுக்கிடையேயான வர்த்தக உறவு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி கிரிஷம் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.