Hybrid renewable Energy System : வடக்கு இலங்கையில் உள்ள யாழ்பாணத்திற்கு அருகே மூன்று தீவுகளில் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி திட்டத்திற்கான ஏலத்தில் வெற்றி பெற்றது சீனா. இந்நிலையில் சீனாவை அதில் இருந்து வெளியேற்றும் பொருட்டு வெளிப்படையாக இலங்கைக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்க முன்வந்துள்ளது என்று கொழும்புவைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த முன்மொழிவை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் இது குறித்து அமைச்சரவை அறிக்கை ஒன்றை முன் வைக்க இருப்பதாகவும் அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் டல்லாஸ் அழகபெருமா கூறியுள்ளார். அந்த செய்தி அறிக்கையில், “ஆசியன் டெவலப்மெண்ட் வங்கியின் கடனுக்கு மாறாக, கருவூலத்தின் சுமையை குறைக்கும் வகையில் இந்தியாவின் முன்மொழிவு இருப்பதாக அவர் கூறியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இலங்கையில் முக்கிய ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீனா; தமிழகத்திற்கு மிக அருகில் சோலார் ப்ரொஜெக்ட்!
நனைநத்தீவு, டெல்ஃப்ட் அல்லது நெடுந்தீவு மற்றும் ஆலந்தீவு என்று தமிழகத்தில் இருந்து வெறும் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஹைப்ரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுவுவதற்கு சீனாவிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய சில நாட்களிலேயே இந்த முயற்சி வந்துள்ளது. இந்த திட்டத்திற்காக சீனாவின் சினோசோர்-இடெக்வின் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்த திட்டத்தில் சீனாவின் தலையீடு இருப்பது குறித்து வடக்கு மாகாணங்களில் செயல்பட்டு வரும் தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தன. சீனாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருக்கும். மேலும் இது தமிழகத்திற்கு மிக அருகில் அமைய இருக்கிறது. இதனால் நாங்கள் சீனாவின் ஈடுபாட்டினை எதிர்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாந்தன் கூறினார். தமிழகர்கள் பிரச்சனைக்காக தமிழக மக்கள் பல நேரங்களில் குரல் கொடுத்தனர். எனவே எங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil