Amazon Fire Photos: வளிமண்டலத்தில் உள்ள கார்பனை உறிஞ்சும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயால் அந்த காடுகள் அழிவதோடு மட்டுமில்லாமல் காட்டுத் தீ காரணமாக எழும் தீப்பிழம்புகளால் ஒவ்வொரு நாளும் மில்லியன் டன் கார்பனை வெளியேற்றுகின்றன.
அமேசான் மழைக்காடுகள் முழுவதும் காட்டுத் தீ சீற்றமடைந்து வருவதால் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள கோர தீ பற்றிய புகைப்பட தொகுப்பு இங்கே. (படங்கள் ராய்ட்டர்ஸ்)
பிரேசிலின் அமேசான் காடுகள் முழுவதும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அளவில் கூக்குரல் எழுந்துள்ளது.
அமேசானுக்குள் பிரேசிலின் 98% -க்கும் மேற்பட்ட பூர்வகுடிகளின் நிலங்கள் உள்ளன. அதில், குறிப்பாக கயாபோ போன்ற குழுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
பிரேசிலின் வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, அந்த பிராந்தியத்தில் 148 பூர்வகுடிகளின் பிரதேசங்களில் 3,553 காட்டுத்தீ எரிந்துகொண்டிருப்பதாக ஒரு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
பிரேசில் அதிபர் போஸ்லோனரோ சுற்றுச்சூழல் கொள்கைகளுக்காக கடுமையான விவர்சனத்துக்குள்ளாகியுள்ளார். இதில் சிலர் போஸ்லோனரோ மழைக்காடுகளின் பாதுகாப்புகளை பலவீனப்படுத்துவதாக கூறுகின்றனர்
அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, கார்பனை உறிஞ்சும் காடுகள் அழிந்துகொண்டிருப்பதை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அமேசான் தீப்பிழம்புகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் டன் கார்பனை வெளியேற்றிவருகின்றன
தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான காட்டுத்தீ கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரிடுவதற்காக காடுகளை அழிக்கிற சட்டவிரோதமான நில அபகரிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டது.