பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசித்த நிகழ்வு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் திருநங்கைக்களுக்கான ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.பாலியல் மற்றும் உணர்வுகள் ரீதியிலான பல்வேறு ஒடுக்குதல்களுக்கு ஆளாபவர்கள் திருநங்கைகள் என்ற பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மறையும் காலமும் விரைவில் வரவுள்ளது.
சமுதாயத்தில் அவர்களை பார்க்கும் பார்வைகளும் 21 நூற்றாண்டில் அதிகளவில் மாறியுள்ளது. இந்தியாவில் பல தொலைக்காட்சியில் திருநங்கைகள் ரிப்போட்டராகவும், தொகுப்பாளராக இருந்து வருகின்றன. அதே போல் சமீபத்தில் பாகிஸ்தான் தொலைக்காட்சியிலும் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக மாறி முதன் முறையாக செய்தியை வாசித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் செனட் அவையில், சமீபத்தில், திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில், திருநங்கை ஒருவர் முதல் முறையாக செய்தியை வாசித்துள்ளார். மாவியா மாலிக் என்ற இந்த திருநங்கை, கொஹெனூர் செய்திகள் என்ற தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்துள்ளார்.
இவர், முதன்முறையாக செய்தி வாசிக்கும் போது அனைவரிடமும் தன்னை மூன்றாம் பாலினத்தவர் என்று பெருமையுடன் அறிமுகம் செய்துக் கொண்டார். மாவியா மாலிக்கிற்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
,