சீனாவில் சுற்றுலா பயணி ஒருவர், கடலில் இருக்கும் டால்பினை உயிரோடு பிடித்து முதுகில் சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் சீனாவில் நிலவி வரும் காலநிலை சுற்றுலா பயணிகளை பெருமளவில் கவர்ந்து வருகின்றன. உலகில் பலமூலைகளில் இருக்கும் சுற்றுலா வாசிகள் பலரும் சீனாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த வகையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர், சீனாவில் இருக்கும் பிரதான கடற்கரையை ஒன்றிற்கு பொழுதை கழிக்க சென்றுள்ளார்.
அதன் பின்பு, அங்கிருந்த டால்பின் ஒன்றையும் சட்ட விரோதமாக பிடித்துள்ளார். டால்பினை பிடித்து அவர், தனது முதுகில் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவருக்கு பின்னால் சென்ற ஒரு நபர் அதை தனது செல்ஃபோனில் படம் பிடித்து உள்ளார்.
இந்த வீடியோ அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நபர் டால்பினை தூக்கிச் செல்லும் போது அது உயிரோடு இருந்ததாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். இதுக் குறித்து ஆய்வு நடத்தியுள்ள சீனா காவல் துறையினர் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?time_continue=57&v=o2GoC36BZyk