பாகிஸ்தான் சுந்தரி அக்காவை தெரியுமா?

கவுசர் அக்காவும் எல்லா உணவுகளை சமைப்பது, கழுவி சுத்தம் செய்வது எல்லாவற்றையும் அனைவரின் கண்முன்னே தான் செய்கிறார்

மெரினா செல்லும் அனைவருக்கும் தெரியும் சுந்தரி அக்கா கடை எங்கே இருக்கிறதுனு.  ‘இது தானா வந்த பெயர் இல்லை. தமிழ்நாடே வெச்ச பெயர்.   அக்காவின் மதிய சாப்பாட்டுக்கும், மீன் குழம்புக்கும் மயங்கிப் போன கூட்டம்  ஒருமுறை சாப்பிட்டு விட்டு சென்று மறுமுறை அவர்களின் குடும்பத்தையே அழைத்து வருவார்கள்.

அக்கா கடையில் கிடைப்பது வெறும் சாப்பாடு மட்டுமில்லை.  அறுசுவைகளுடன்  ஏழாவது சுவையாக பரிமாறப்படும் அன்பும் தான்.  வருடத்திற்கு ஒரு நாள்  சுந்தரி அக்கா தனது கணவரின் நினைவு நாள் அன்று, அவரின் கடையே தேடி வருபவர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பார்.

இப்படி சென்னை மக்கள் அனைவருக்கும் தெரிந்த சுந்தரி அக்காவை போலவே பாகிஸ்தானிலும் ஒரு அக்கா வாழ்ந்து வருகிறார். தனது கணவன் விட்டுச் சென்ற பிறகு வருமானத்திற்கு வேறு வழியில்லாம் சின்னதாக தனது வீட்டு வாசலில் 5 பாத்திரங்களை வைத்து  உணவகம் ஆரம்பித்தவர் தான் கவுசர் பிபி.

48 வயதாகும் இவருக்கு,  5 பிள்ளைகள்.  தனது கணவரின் மறைவுக்கு பின்னர் பல நாட்கள் இவரும் , இவரின் பிள்ளைகளும்  உணவின்றி தவித்துள்ளனர்.அதன் பிறகு கவுசர் அக்கா, கடன் வாங்கி இந்த சிறு கடையை ஆரம்பித்தார். அவரின்  கைருசியால் சீக்கிரமே அந்த பகுதியில் கவுசர் பிபி கடை பிரபலம் ஆகியது.

நாள்தோறும்  நூற்றுக்கணக்கனோர்  இவரிடம் உணவு சாப்பிட வந்து செல்கின்றனர்.  பல நாட்கள் உணவில்லாமால் இவரும், இவரின் பிள்ளைகளும்   தவித்த காரணத்தினால், அவரால் முடிந்த வரை ஏழைகளுக்கு இலவசமாகவும் கவுசர் அக்கா உணவு வழங்கி வருகிறார்.

சுந்தரி அக்கா கடையை போலவே, கவுசர் அக்காவும்  எல்லா உணவுகளை சமைப்பது, கழுவி சுத்தம் செய்வது எல்லாவற்றையும் அனைவரின் கண்முன்னே தான் செய்கிறார். கூடிய விரைவில் இந்த சின்ன கடையை பெரிதாக்கி,  தம்மை போல் கணவனை இழந்த பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், என்பதே கவுச்சர் அக்காவின் ஆசையாம்.

 

سرگودھا میں خواتین کا ہوٹل

Posted by Pakistan Media News on 9 मार्च 2018

×Close
×Close