Advertisment

இலங்கை - இந்தியா இடையே நில இணைப்பு ஏற்படுத்த ரணில் விக்கிரமசிங்க விருப்பம்

யாழ்பாணம் பகுதியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சுற்றுப்பயணம்; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பை ஏற்படுத்த விருப்பம்

author-image
WebDesk
New Update
ranil and modi

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் 2018 இல் இந்தியாவிற்கு பயணம் செய்த போது. (எக்ஸ்பிரஸ் கோப்பு படம் - தாஷி டோப்கியால்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மேம்படுத்துவது தொடர்பான பரந்த கலந்துரையாடலில் ஈடுபடும் போது, ​​இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: In Tamil-dominated Jaffna, President Wickremesinghe pushes for land connectivity between Sri Lanka and India

வடகிழக்கு மன்னார் மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையில் பாலம் அமைக்கும் யோசனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னாருக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க எடுத்துரைத்துள்ளதாகவும், பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கொன்றதையடுத்து, அந்த இயக்கம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளாக தனித் தமிழர் தாயகம் கோரி இராணுவப் பிரச்சாரத்தை நடத்திய பிரதேசம் என்பதால் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1980 களின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என்று 2017 ஆம் ஆண்டு அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்பிராந்தியத்தில் பொருளாதார மேம்பாடு இல்லை என்பதுடன், தமிழர்கள் செறிந்து வாழும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேம்பாட்டிற்கு தாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அண்மைய ஆண்டுகளில் இலங்கைத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

திவால் நிலையில் உள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

வடக்குப் பொருளாதாரத்தை தேசியப் பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான வழிகளை ஜனாதிபதி உறுதியளித்தார்.

வடமாகாணத்தின் அழுத்தமான பிரச்சினைகளில் நிலத் தகராறு மற்றும் காணாமற்போனோர் விடயங்கள் முதலிடம் வகிக்கின்றன. அரசாங்கம், இந்தக் கவலைகளைத் தீர்ப்பதற்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது,” என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நிலம் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை ஆகிய இரண்டிற்கும் தீர்வு காண்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

பொருளாதார மேம்பாட்டிற்கு மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் யுத்தத்தின் போது இழந்த வருமானத்தை மீண்டும் பிராந்தியத்திற்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மேம்பாட்டு வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி தனது நான்கு நாள் பயணத்தின் போது, ​​இலங்கை அரசியலமைப்பின் இந்தியாவின் ஆதரவுடன் 13வது திருத்தத்தின் (13A) முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் தலையீடு இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை அடைய 13ஏ மூலம் உருவாக்கப்பட்ட மாகாண நிர்வாகங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட 13ஏ சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்க 13ஏ வகை செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment