Advertisment

இந்திய மாணவி மரண வழக்கில் அமெரிக்கா காவல்துறை அதிகாரி விடுவிப்பு; தூதரகம் கடும் எதிர்ப்பு

இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கில் அமெரிக்கா காவல்துறை அதிகாரி விடுவிப்பு; அதிகாரிகளிடம் விஷயத்தை வலுவாக எழுப்பிய இந்திய தூதரகம்

author-image
WebDesk
New Update
jaahnavi

இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலாவை தனது வாகனத்தால் தாக்கி கொன்ற சியாட்டில் காவல்துறை அதிகாரியை விடுவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நீதி கிடைக்க ஆதரவை வழங்கியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Raised matter strongly with authorities’: India after US police officer who killed Jaahnavi Kandula is let off the hook

ஒரு நாள் முன்பு, ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினர், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும்போது, ​​“முதலில் அவர்கள் சம்பவம் குறித்து கேலி செய்தார்கள், இப்போது அதற்கு பொறுப்பான அதிகாரி விடுவிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கு நீதியும் இல்லை நியாயமும் இல்லை. இது தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துகிறது,” என்று தெரிவித்தனர்.

இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜாஹ்னவி கந்துலாவின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து கிங் கவுண்டி அரசு வழக்கறிஞரின் சமீபத்தில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையின் பேரில், நியமிக்கப்பட்ட குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மேலும் ஜாஹ்னவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கும்,” என்று பதிவிட்டுள்ளது.

மேலும், “உரிய தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாக எழுப்பியுள்ளோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடைவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம்,” என்றும் தூதரகம் பதிவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, வடகிழக்கு பல்கலைக்கழகத்தின் சியாட்டில் வளாகத்திற்கு அருகே காவல்துறை அதிகாரி கெவின் டேவ் ஓட்டிச் சென்ற போலீஸ் கார் அவர் மீது மோதியதில் ஜாஹ்னவி கொல்லப்பட்டார். அவருக்கு 23 வயது மற்றும் தகவல் அமைப்புகளில் எம்.எஸ் படித்துக்கொண்டிருந்தார்.

புதன்கிழமை, கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம், சியாட்டில் காவல்துறை அதிகாரி கெவின் டேவ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்னோக்கி நகர்த்த மாட்டோம் என்று தெரிவித்ததாக FOX13 சியாட்டில் தெரிவித்துள்ளது. கிரிமினல் வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிப்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இல்லை என்று நம்புவதாக கிங் கவுண்டி அரசு வழக்கறிஞர் லீசா மேனியன் கூறினார்.

கர்னூல் மாவட்டத்தின் கவுதாலம் மண்டலத்தில் உள்ள ஹல்வி கிராமத்தைச் சேர்ந்த ஜாஹ்னவியின் பெற்றோர் அதோனியில் வசிக்கின்றனர், அங்கு அவரது தாயார் விஜயலட்சுமி பள்ளி ஆசிரியர் அவரது தந்தை கே ஸ்ரீகாந்த் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜாஹ்னவி 2019 இல் B.Com முடித்துவிட்டு, டிசம்பரில் முடிவடைய இருந்த இரண்டு வருட MS படிப்பைத் தொடர, செப்டம்பர் 2020 இல் அமெரிக்கா சென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment