இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – ஏசியான் நாடுகள் உறுதி
சனிக்கிழமை புனோம் பென்னில் நடைபெற்ற 19வது ஏசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உரையாற்றிய பிறகு, இந்தியாவும் ஏசியான் நாடுகளும் விரிவான வியூக கூட்டாண்மையை நிறுவி, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்தன.
ஜகதீப் தன்கர் தனது மூன்று நாள் பயணமாக கம்போடியா சென்றுள்ளார். இந்த ஆண்டு ஏசியான்-இந்தியா உறவுகளின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது மற்றும் ஏசியான்-இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) என்பது தென்கிழக்கு ஆசியாவில் 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்: இதில், புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவிற்கும் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஏசியான் குழுவிற்கும் இடையே புதிய உரையாடல் தளங்களை நிறுவுவதன் மூலம் இணையப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஏசியான் உறுப்பு நாடுகளும் இந்தியாவும் முயன்றன.
ஒரு கூட்டறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் வலுவாக வளர்ந்த தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான நாகரீக இணைப்புகள், கடல்வழி இணைப்பு மற்றும் குறுக்கு கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றை அவர்கள் ஒப்புக்கொண்டனர், இது ஏசியான்-இந்தியா உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
ரிஷி சுனக் கீழ் இந்தியாவுடன் உறவுகள் மேம்படும் – போரிஸ் ஜான்சன் பேச்சு
இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் கீழ் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் "அற்புதமான மேல்நோக்கிய பாதையில்" இருக்கும் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சனிக்கிழமை தெரிவித்தார்.
"நாம் ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிறோம்" என இரு நாடுகளும் முன்பை விட இப்போது ஒருவருக்கொருவர் தேவைப்படுகின்றன, என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.
இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும் ஜான்சன் அழைப்பு விடுத்தார், அதற்காக அடுத்த தீபாவளி வரை காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
“இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் குஜராத்தில் சச்சின் டெண்டுல்கரைப் போல வரவேற்கப்பட்ட மிஷனைப் போல் நான் வழிநடத்திய எந்த மிஷனும் வெற்றிபெறவில்லை. எல்லா இடங்களிலும் எனது படங்கள் இருந்தன, ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் நடனமாடுகிறார்கள், ”என்று போரிஸ் ஜான்சன் புது தில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் தனது உரையில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியும் அவரும் தனது இந்திய பயணத்தின் போது இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்ட ஜான்சன், "அருமையான பேச்சுக்கள்" நடந்ததாகவும், முடிவுகள் கிடைத்ததாகவும் கூறினார்.
மாலத்தீவு தீ விபத்து; இந்தியர்கள் உடல்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு
மாலத்தீவின் தலைநகரில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீ விபத்தில் கருகி இறந்த ஏழு இந்திய மற்றும் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளின் உடல்களை மாலத்தீவு அதிகாரிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் செயல்முறையைத் தொடங்கியுள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரில் ஏழு பேர் இந்திய பிரஜைகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இருவர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என வெள்ளிக்கிழமை மாலத்தீவு காவல்துறை சேவை தெரிவித்துள்ளது. எனினும், இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் ஒன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மூன்று இந்திய பெண்களும் நான்கு இந்திய ஆண்களும் கொல்லப்பட்டனர். பங்களாதேஷ் ஆண் ஒருவரும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.