ரஷ்யாவிடம் இருந்து ஜெட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான ஆர்டரை இந்திய ரத்து செய்தது என்று அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியிடம் அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டொனால்டு லூ தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதன்காரணமாக, இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவது கடினமாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியிடம் வெளியுறவு மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டொனால்டு லூ இத்தகவலை தெரிவித்தார்.
வீழ்ந்த உக்ரைன் துறைமுகம்; அமைதிப் பேச்சு… லேட்டஸ்ட் 5 நிகழ்வுகள்
இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இதனை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்கியதற்காக நமது முக்கிய பாதுகாப்பு கூட்டாளிக்கு (இந்தியா) தடைகள் எதுவும் விதிக்க வேண்டாம் என்றார்.
-நிருபமா சுப்ரமணியன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“