இந்தியாவை விரல் நீட்டும் சீனா: கட்டுப்பாடு காக்க வலியுறுத்தல்

china border violence : இருநாடுகளின் படைகளுக்கிடையே நிகழ்ந்த மோதலில், 45 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By: Updated: June 16, 2020, 03:55:27 PM

இந்திய – சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு இந்தியாவே காரணம் என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா, கட்டுப்பாடடுகளை காக்க வேண்டும் என்று சீனா மேலும் வலியுறுத்தியுள்ளது.

யான லடாக் பகுதியில், லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்று இந்தியா கூறியிருந்த நிலையில், இந்திய படைகள் தான் எல்லை தாண்டி வந்து, சீன படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருநாடுகளுக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எல்லை தாண்டி வந்து இந்தியா அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்திவருகிறது. இது எல்லைப்பகுதியில் மேலும் பதட்டத்தை அதிகரிக்கும் என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா எல்லைதாண்டி வந்து, சீன படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர் இந்தியா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சீன ராணுவத்துடன் நடந்த மோதலில், இந்திய வீரர்கள் பலியானதாக இந்தியா தெரிவித்துள்ளத. இந்த விவகாரத்தில் எல்லைப்பதட்டத்தை உருவாக்க இந்தியா முயற்சிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய படைகள், திங்கட்கிழமை மட்டும் இரண்டு முறை அத்துமீறி சீன எல்லையை தாண்டியுள்ளது. இந்திய படையினரின் அத்துமீறலை தடுக்கும் வகையிலேயே, பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இதன்காரணமாகவே, இருநாடுகளின் தரப்பிலும் உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தியா, எல்லை தாண்டி அத்துமீறியுள்ளது. ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும்நிலையில், மறுபக்கம் இந்தமாதிரி இந்தியா நடந்துகொள்கிறது. இந்தியாவின் இந்த நிகழ்வால், எல்லைப்பகுதியில் பதட்டம் மேலும் அதிகரிக்கும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மோதலில், இந்திய ராணுவ அதிகாரியும், 3 படைவீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர். இருநாடுகளின் படைகளுக்கிடையே நிகழ்ந்த மோதலில், 45 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – China points fingers at India, urges restraint

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:India china border issue china lac galwan valley india china china war

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X