இந்தியா, சீனா, ரஷ்யா வீசிய குப்பைகளை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய...

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய மிதக்கும் குப்பைகளையும் லாஸ் ஏஞ்சல்ஸில் சுத்தம் செய்ய ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தை மிகவும் சிக்கலான பிரச்சினை என்று கூறும் அமெரிக்க அதிபர் அதே வேளையில், நம்பினாலும் நம்பாவிட்டாலும் தன்னை பல வழிகளில் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று கருதுவதாக கூறியுள்ளார்.

நான் காலநிலை ஒழுங்கை மிகவும் விரும்புகிறேன். இந்த கிரகத்தில் நான் தூயமையான காற்றை விரும்புகிறேன். எனக்கு சுத்தமான காற்றும் நீரும் இருக்க வேண்டும்.” என்று டிரம்ப் நியூயார்க்கின் பொருளாதார கிளப்பில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. ஏனெனில் அது ஒருதலைப்பட்சமான, பயங்கரமான, பொருளாதார ரீதியில் நியாயமற்றது. மூன்று ஆண்டுகளுக்குள் உங்கள் வணிகங்களை மூடுங்கள், சிதைக்க வேண்டாம், துளையிட வேண்டாம், எங்களுக்கு எந்த சக்தியும் தேவையில்லை என அமெரிக்க வேலைகளை அழித்து வெளிநாட்டு மாசுபடுத்துபவர்களைக் காப்பாற்றிய பயங்கரமான பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்.” என்று டிரம்ப் கூறினார்.

பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஒரு பேரழிவு என்றும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

“இது மிகவும் நியாயமற்றது. இது 2030 வரை சீனாவுக்கு பிரச்னை இல்லை. ரஷ்யா 1990களுக்கு செல்கிறது. அங்கு அடிப்படை ஆண்டே உலகிலேயே மிக மோசமான ஆண்டு. இந்தியா, அவர்கள் வளரும் நாடு என்பதால் நாங்கள் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும். ‘நாங்கள்கூட ஒரு வளரும் நாடு’என்று நான் சொன்னேன்” என்று பார்வையாளர்களின் சிரிப்பிற்கு இடையே டிரம்ப் கூறினார்.

வர்த்தகக் கொள்கை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடைய ஆபத்து குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “மக்கள் கேள்வி கேட்கும்போது… காலநிலை பற்றி – நான் எப்போதும் சொல்கிறேன்: உங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரு சிறிய பிரச்சினை இருக்கிறது.” என்று கூறினார்.

“எங்களுக்கு ஒப்பீட்டளவில் அமெரிக்கா என்றா சிறிய நிலம் உள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பல நாடுகளைப் போலவே, அவர்களின் தொழிற்சாலைகள் வெளியிடும் புகைகளை சுத்தம் செய்வதற்கும், அவர்களின் குப்பை அனைத்தையும் சுத்தம் செய்வதற்கும் முற்றிலும் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் கடலில் வீசிய குப்பைகள் எல்லாம் லாஸ் ஏஞ்சல்ஸில் மிதக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸுக்கு உள்ள பிற சிக்கல்களுடன் அது இதையும் எதிர்கொள்கிறது” என்று டிரம்ப் கூறினார்.

மேலும், டிரம்ப் “நடப்பதை பார்க்கும்போது இதைப் பற்றி யாரும் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்கள் நம் நாட்டைப் பற்றி பேச விரும்புகிறார்கள். இதை நாம் செய்ய வேண்டும். எங்களிடம் இனி விமானங்கள் இருக்க முடியாது. எங்களிடம் இனி மாடுகள் இருக்க முடியாது. எங்களிடம் எதுவும் இருக்க முடியாது. ” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close