/indian-express-tamil/media/media_files/2024/12/22/mpwbf1AdZlg0dAKADXCt.jpg)
ஜெர்மனியின், மக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நடைபெற்ற தாக்குதலில் 7 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 7 Indians among injured in Germany attack; Delhi says senseless, horrific
"ஜெர்மனியின் மாக்டேபர்க்கில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூர தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இந்தியர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் 50 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை கூட்டத்திற்குள் ஓட்டிச் சென்றதாக காவல்துறை அறிக்கைகள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் 9 வயது சிறுவனும் உயிரிழந்தான்.
தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் அல்-அப்துல்மோஹ்சென் என்பவர், தன்னை ஒரு முன்னாள் முஸ்லீம் எனக் கூறும் சவுதியின் "அதிருப்தியாளர்" எனக் கருதப்படுகிறது. ஜெர்மனியில் மிகப்பெரிய விஷயம் நடக்கப் போகிறது என அந்நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். ஐரோப்பாவில் முஸ்லிம் குடியேற்றத்தை விமர்சித்தும் அந்நபர் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். சம்பவ இடத்தில் இருந்து அந்நபரை போலீசார் கைது செய்தனர். அந்நபர் ஒரு மனநல மருத்துவர் என்றும், கடந்த 2006-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து ஜெர்மனிக்கு வந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.