Advertisment

இலங்கையில் எரிசக்தி தட்டுப்பாடு; 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் அளித்து உயிர்கொடுத்த இந்தியா

இலங்கையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்க உதவும் வகையில் இந்தியா 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
India delivers to Sri Lanka 40000 metric tonnes of fuel, India, Sri lanka, இலங்கையில் எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கைக்கு 40000 மெட்ரிக் டன் எரிபொருள் அளித்தது இந்தியா, India gives 40000 metric tonnes of fuel, Sri lanka face fuel crisis

இலங்கையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்க உதவும் வகையில் இந்தியா 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisment

“இந்தியா இலங்கையின் உறுதியான பங்காளி, உண்மையான நண்பன். இந்திய தூதர் (கோபால் பாக்லே) 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் சரக்குகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்டது” என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வெளிநாட்டு பணம் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் இலங்கையில் பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இலங்கை எதிர்கொண்டுள்ள எரிசக்தி நெருக்கடியைக் குறைக்க உதவும் வகையில் இந்தியா செவ்வாய்க்கிழமை 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியது.

“இந்தியா இலங்கையின் உறுதியான பங்காளி, உண்மையான நண்பன் என்று இந்திய தூதகரத்தின் உயர் ஆணையர் கோபால் பாக்லே இந்தியன் ஆயில் நிறுவனத்தால் 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் சரக்குகள் ஒப்படைத்தார்” என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைய்ல் வெளிநாட்டு எரிபொருள் இருப்புக்கள் குறைந்துவிட்டதால் பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்டுள்ள அவசர எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோலை வாங்க இலங்கை முடிவு செய்தது.

இலங்கை கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு வந்து சென்ற 15 நாட்களில், அதனால், இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதார நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தியா எரிபொருளை வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இலங்கையில் உள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை உயர்த்தவும் உணவு இறக்குமதிக்காகவும் இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கைக்கு அறிவித்தது.

இந்தியா வழங்கியுள்ள இலங்கைக்கான பொருளாதார நிவாரணம் கிட்டத்தட்ட அந்நாட்டிற்கு உயிர்கொடுத்துள்ளது. ஏனென்றால், இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால், மின்சாரம் மற்றும் எரிபொருள் கிடைப்பதை பாதித்தது.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கைக்கு எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இது உடனடி பொருளாதார நிவாரணத்தி ஒரு பகுதியாகும்.

இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் கொழும்பு துறைமுகத்தில் இருந்தபோது ஸ்வர்ண புஷ்ப் என்ற எண்ணெய் கப்பலானது இந்த பொருட்களை செவ்வாய்கிழமை விநியோகித்தது.

எரிபொருள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்தியா-இலங்கை நட்பு தொடர்ந்து செயல்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment