India is filthy says Trump while talking about climate change : நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பளாராக, அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அவரது கட்சியில் துணை அதிபர் வேட்பாளாராக இந்திய-அமெரிக்க வம்சாவளி கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நேற்று நாஷ்வில் பகுதியில் நேற்று விவாத நிகழ்வில் பங்கேற்றனர்.
பொருளாதாரம், மருத்துவ சேவைகள், உலக சுற்றுச்சூழல் என்று பல்வேறு விசயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது டொனால்ட் ட்ரெம்ப் இந்தியா குறித்து பேசிய விசயங்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
மேலும் படிக்க : மழையில் ஆடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரீஸ்… நெட்டிசன்கள் வரவேற்பு!
பருவநிலை மாற்றம் குறித்து பேசிய அவர் இந்தியா ஒரு அசிங்கமான நாடு என்று கூறியுள்ளார். அமெரிக்காவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசிய அவர், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளை பாருங்கள். அந்த நாடுகள் எல்லாம் அசிங்கமானவை. காற்றின் தரம் மிகவும் குறைவாக இருக்கிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து நம்மை நீக்கிவிட்டனர். இது நல்லதல்ல. நாம் மிகவும் சுத்தமான காற்றையும், நீரையும், குறைவான கார்பன் உமிழ் அளவையும் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil