காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய 3ம் நபர் தேவையில்லை என பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் தெரிவித்தார். இது இரு நாட்டு பிரச்சனை என்று டிரம்ப் ஒத்துக்கொண்டார்.
பிரான்சில் நடந்த இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர் இந்த சந்திப்பில் மோடி கூறியதாவது: மனித நேயம் மற்றும் அமைதிக்காக பாடுபடும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா உள்ளன. இரு நாட்டு ராஜ்ய உறவு வலுவாக உள்ளது. தொடர்ந்து இருவரும் இணைந்து பாடுபடுவோம். வர்த்தகம், முதலீடு தொடர்பான விஷயங்கள் குறித்து அதிபர் டிரம்ப்புடன் விவாதித்தேன். காஷ்மீர் இரு நாட்டு பிரச்சனை. பிற நாடுகள் நிலை குறித்து கவலை இல்லை. மத்தியஸ்தம் தேவையில்லை பாகிஸ்தானுடனான பிரச்சனை விரைவில் தீரும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில்: காஷ்மீர் , பாகிஸ்தான் விவகாரம் குறித்து மோடியுடன் பேசினேன். காஷ்மீர் என்பது இரு நாட்டு பிரச்சனை. இரு நாடுகளும் கருத்து வேற்றுமைகளை களைந்து கொள்ள முடியும். காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் தீர்த்து கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சிறந்த நட்பு நாடு. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று இதுவரை டிரம்ப் கூறி வந்தார். இந்நிலையில், காஷ்மீர் விவகாரம், இந்திய, பாக்., பிரச்னை என்று டிரம்ப் கூறியது, பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.