பாகிஸ்தானிலும் ஒலிக்கும் ஸ்ரீதேவின் புகழ்!

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றன

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பிரபலங்களும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றன.

இந்திய திரையுலகில் நட்சத்திரமாக மின்னிய நடிகை ஸ்ரீதேவி நேற்றுமுன்தினம் துபாயில் மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது இந்த  துயரச் சம்பவம் நடைபெற்றது. அவரின் உடல், அம்பானியின் தனி  விமானம் மூலம் இன்று மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஸ்ரீதேவிக்கு  பாலிவுட், கோலிவுட்,  அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும்   தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றன, இந்நிலையில்,  பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றன,

இந்நிலையில். ஸ்ரீதேவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’மாம்’ திரைப்படக்த்தில் நடித்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சஜல் அலி. ஸ்ரீதேவியின் மரணம் இவரை மிகுந்த துக்கக்த்தில் ஆழ்த்தியுள்ளது. இதுக் குறித்து அவர் கூறியிருப்பது “நான் எனது அம்மாவை மீண்டும் ஒருமுறை இழந்துள்ளேன். படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீதேவி என்னை தனது மகள் போல் பார்த்துக்கொண்டார். அவரின் இறப்பு எனக்கு மற்றொரு சோகம்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நடிகை, மஹிரா கான், தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதேவின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் நடிகர் அலி ஷவர், நடிகை ஸ்ரீதேவி அழகான தருணங்களையும், கண்ணீரையும் நமக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக தனது ட்விட்டட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close