/indian-express-tamil/media/media_files/2025/06/16/P2SqkBAIVYOBoZYJffam.jpg)
இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலி: தெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
ஈரான்-இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய மாணவர்களை ஈரானுக்குள்ளேயே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியத் தூதரகம் பாதுகாப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்திய நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. "மற்ற சாத்தியமான வாய்ப்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்," என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
Statement on Iranhttps://t.co/RsR4Cz4cJ8pic.twitter.com/GKuITTwK8D
— Randhir Jaiswal (@MEAIndia) June 15, 2025
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்திய சமூகத் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. "சமூகத் தலைவர்களுடன் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தூதரகம் தொடர்பில் உள்ளது," என்று தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியது
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணுசக்தி லட்சியங்களைத் தகர்க்கும் நோக்கில்"ஆபரேஷன் ரைசிங் லயன்" (Operation Rising Lion) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.இஸ்லாமிய அரசின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதியையும், அதன் முக்கிய செறிவூட்டும் வசதியான Natanz பகுதியையும் தங்கள் நாடு தாக்கியுள்ளதாகவும் அவர் அப்போது கூறினார். இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாக ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. மோதலை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்த போதிலும், இரு நாடுகளும் பின்வாங்க மறுத்து வருகின்றன. ஈரான் தரப்பில், இஸ்ரேல் தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதன் துணை ராணுவப் படையான புரட்சிகர படையின் உளவுத்துறைத் தலைவரை கொன்றதாகவும், இஸ்ரேல் தனது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து மக்கள் மையங்களில் நடந்த தீவிர வான்வழித் தாக்குதல்களில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மறுபுறம், இஸ்ரேல், ஈரானின் வேகமாக முன்னேறி வரும் அணுசக்தி திட்டம் மற்றும் இராணுவத் தலைமை மீது தனது ஏவுகணைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறது. வெள்ளிக்கிழமை முதல் ஈரான் 270-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், அவற்றில் 22 ஏவுகணைகள் இஸ்ரேலின் அதிநவீன பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி residential புறநகர்ப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 390 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.