Advertisment

இலங்கைக்கு நட்புக் கரம்: 40,000 டன் அரிசி அனுப்புகிறது இந்தியா

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதத்திற்கு கீழ் குறைந்தததையடுத்து, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

author-image
WebDesk
New Update
இலங்கைக்கு நட்புக் கரம்: 40,000 டன் அரிசி அனுப்புகிறது இந்தியா

கொரோனா பெருந்தொற்று பிறகு, இலங்கையின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததையடுத்து, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் வாங்க பணம் இல்லாததால், இலங்கை மக்கள் தினமும் 13 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்கின்றனர்.

Advertisment

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன். இதன் தொடர்ச்சியாக பொருளாக உதவி அனுப்பவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து மிகப்பெரிய உணவு உதவியாக 40 ஆயிரம் டன் அரிசியை அனுப்பி வைக்கும் பணியில் இந்திய வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளதாக இரண்டு அரசு அதிகாரிகள் சனிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதத்திற்கு கீழ் குறைந்தததையடுத்து, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இவை, நாணய மதிப்பிழப்பு ஏற்படுத்தியது மட்டுமின்றி உலகளாவிய கடன் வழங்குநர்களிடமும் உதவி கோர வழிவகுத்தது. இலங்கையில் ஒரு முக்கிய திருவிழாவிற்கு முன்னதாக பிரதான உணவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறை, உணவு பொருள்களின் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை என இலங்கையின் முயற்சிகளுக்கு மத்தியில் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அவசர நிலையும் அங்கு பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது. இதுதவரி, இன்று மாலை 6 மணி முதல் நாளை கால் 6 மணி வரை , ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment