உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்திய மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசியில் பேசிய பிறகு ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘கடும் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்களை பத்திரமாக வெளியேற்றுமாறு ராணுவத்தினருக்கு அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவம் வெளியிட்டுளள அறிக்கையிலும் இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என்றும் அவர்களை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்யா செயல்படுகிறது – தூதர்
எனினும், இத்தகவலை மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிக்கித் தவித்துவரும் மாணவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil