Advertisment

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல்; ‘அழுக்கு இந்து… இது இந்தியா இல்லை’

அமெரிக்காவில் இந்திய-அமெரிக்கர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்: ‘அழுக்கு இந்து... இது இந்தியா இல்லை’ என கிருஷ்ணன் ஜெயராமன் என்பவர், 37 வயதான சிங் தேஜிந்தர் என்பவரால் வார்த்தைகளால் தாக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல்; ‘அழுக்கு இந்து… இது இந்தியா இல்லை’

அமெரிக்காவின் டெக்சாஸில் இந்திய அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய-அமெரிக்கர் ஒருவர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார், அவர் "அழுக்கு இந்து" மற்றும் "கேவலமான நாய்" என்று இனவெறி அவதூறுகளால் தாக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஆகஸ்ட் 21 அன்று கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள கிரிம்மர் பவுல்வர்டில் உள்ள டகோ பெல்லில் கிருஷ்ணன் ஜெயராமன், 37 வயதான சிங் தேஜிந்தரால் அவதூறு வார்த்தைகளால் தாக்கப்பட்டார் என்று NBC செய்தி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் நிதியுதவி; சேகுவாராவின் மகன் மரணம்… உலகச் செய்திகள்

யூனியன் சிட்டியைச் சேர்ந்த தேஜிந்தர், சிவில் உரிமைகளை மீறுதல், தாக்குதல் மற்றும் அமைதியை சீர்குலைத்தல் போன்ற வெறுப்பு குற்றத்திற்காக திங்களன்று குற்றம் சாட்டப்பட்டதாக ஃப்ரீமாண்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.

தேஜிந்தர், "ஆசிய/இந்தியர்" என்று எஃப்.ஐ.ஆர் ஆவணங்களில் குறிப்பிடபட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

தேஜிந்தர் தன்னிடம் பேசிய எட்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்த அந்த அட்டூழியத்தை, கிருஷ்ணன் ஜெயராமன் படம்பிடித்து, தனது தொலைபேசியில் பதிவு செய்தார்: அதில், “நீ கேவலமாக இருக்கிறாய், நாயே. நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம்” என்று தேஜிந்தர் கூறுகிறார். அசிங்கமாக கத்தி, தேஜிந்தர் அவரை "அழுக்கு இந்து" என்று அழைத்தார், "குறிப்பிட்ட கெட்ட வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார், ஜெயராமன் இறைச்சி சாப்பிடாதவர்" கூறி "மாட்டிறைச்சி!" என்று அவரது முகத்திற்கு நேராக கத்தினார். வீடியோவில் ஜெயராமன் மீது தேஜிந்தர் இரண்டு முறை எச்சில் துப்பினார்.

ஒரு கட்டத்தில் தேஜிந்தர், “...இது இந்தியா இல்லை! நீங்கள்...இந்தியாவில் மேலே உள்ளீர்கள், இப்போது நீங்கள்...அமெரிக்காவில் மேலே உள்ளீர்கள்," என்று கூறியதாக அறிக்கை கூறியது.

ஜெயராமன் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்ததாகவும், குற்றவாளியும் இந்தியர் என்பதை பின்னர் அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.

"உண்மையாக சொல்ல வேண்டுமானால் நான் பயந்துவிட்டேன். நான் ஒருபுறம் கோபமடைந்தேன், ஆனால் அவர் மிகவும் போர்க்குணமாகி என் பின்னால் வந்தால் என்ன செய்வது என்று நான் பயந்தேன்,” என்று அவர் NBC நிறுவனத்திடம் கூறினார்.

"உங்களுடன் சண்டை போட நான் வரவில்லை" என்றார் ஜெயராமன். "உனக்கு என்ன வேண்டும்? இந்துக்களாகிய நீங்கள் அவமானம், கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார். பின்னர் அவர் என் மீது துப்பினார், ”என்று KTLA.com இணையதளம் தெரிவித்துள்ளது.

அப்போதுதான் அவரும் ஒரு உணவக ஊழியரும் ஃப்ரீமாண்ட் போலீஸை அழைத்ததாக ஜெயராமன் கூறுகிறார். எட்டு நிமிடங்களுக்கும் மேலாக அந்த நபர் தொடர்ந்து கத்தினார் என்று அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஃபிரீமாண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராமனின் வீடியோ ஃப்ரீமாண்ட் போலீஸ் அதிகாரிகளின் வருகையுடன் முடிந்தது என்று abc7news.com தெரிவித்துள்ளது.

பின்னர் காவல்துறை உயரதிகாரி சமூக ஊடகங்களில் விளக்கமளித்தார்.

காவல்துறைத் தலைவர் சீன் வாஷிங்டன் கூறுகையில்: "வெறுப்பு சம்பவங்கள் மற்றும் வெறுக்கத்தக்க குற்றங்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் அவை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை புரிந்துகொள்கிறோம். இந்த சம்பவங்கள் வெறுக்கத்தக்கது. பாலினம், இனம், தேசியம், மதம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூக உறுப்பினர்களையும் பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம்.

"ஒருவரையொருவர் மதிக்கும்படி சமூகத்தை வலியுறுத்த விரும்புகிறோம், மேலும் இது போன்ற எந்தவொரு சூழ்நிலையையும் உடனடியாக புகாரளிக்க வேண்டும், ஏனெனில் அவை விசாரணையின் போது, ​​​​ஒரு குற்றத்தின் நிலைக்கு உயரலாம். வெறுக்கத்தக்க குற்றம் நடந்தால், பின்தொடர்வதற்கும் விசாரணை செய்வதற்கும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். ஃப்ரீமாண்ட் நாட்டின் மிகவும் மாறுபட்ட சமூகங்களில் ஒன்றாகும், மேலும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணியைச் சேர்ந்த சமூக உறுப்பினர்களின் பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளியன்று, அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் நான்கு இந்திய-அமெரிக்கப் பெண்கள் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அவர்கள் மீது இனவெறி அவதூறுகளை வீசிய ஒரு மெக்சிகன்-அமெரிக்கப் பெண், அவர்கள் அமெரிக்காவை "அழிக்கிறார்கள்", "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்" என்று தாக்கினர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment