துபாயில் விடுமுறை அளிக்காத இந்திய முதலாளியை தாக்கிய நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், துபாயில் கட்டிடப் பொறியாளராக பணிப்புரிந்து வருகிறார். சமீபத்தில், இவரின் தலைமையில் கீழ் வேலை செய்ய வங்காள தேசத்தை சேர்ந்த பணியாளர்கள் சிலர் வந்துள்ளனர். இதில் 35 வயதாகும் ஊழியர் ஒருவர், தனது டீம் ஹெட்டான இந்தியரிடம் சில நாட்கள் விடுமுறை வழங்கும்படி கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த டீம் ஹெட், வேலைக்குச் சேர்ந்து சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தொடர்ந்து விடுமுறை வழங்க முடியாது என்று தெரிவித்தார். இருப்பினும், அந்த ஊழியர் 5 நாட்களுக்கு விடுமுறை எடுத்துள்ளார். விடுமுறைக்கு பின்பு வேலைக்கு வந்த ஊழியரிடம் கோபத்தை காட்டிய டீம் ஹெட், 5 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த ஊழியர், தனது டீம் ஹெட்டான இந்தியர் மீது சரமாரியமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அவருக்கு உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள துபாய் காவல் துறையினர், இந்தியரை தாக்கிய ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், பணிப்புரிய வந்த இடத்தில், குற்றச்செயலில் ஈடுப்பட்டதற்காக அந்த ஊழியர் விரைவில் தனது சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விடுமுறை அளிக்காததால் டீம் ஹெட்டான இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம், துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.