Advertisment

லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: இங்கிலாந்து நாட்டவர் கைது; என்.ஐ.ஏ விளக்கம்

கடந்தாண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நடந்த போராட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் ஹவுன் ஸ்லோவில் வசிக்கும் இந்தர்பால் சிங் காபா என்ற நபரை என்.ஐ.ஏ கைது செய்ததாக கடந்த வியாழக் கிழமை கூறியது.

author-image
WebDesk
New Update
Ind attac.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நடந்த போராட்டம் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கடந்த வியாழக் கிழமை கூறியது.  தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் தேசியக்  கொடியை சேதப்படுத்திய குழுவில் இருந்தவர் என்பதும் கடந்த ஆண்டு பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்குச் செல்ல இந்தியாவுக்குள் நுழைந்தபோது அட்டாரி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

Advertisment

மார்ச் 22, 2023 அன்று நடந்த போராட்டங்களின் போது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இங்கிலாந்தின் ஹவுன்ஸ்லோவில் வசிக்கும் இந்தர்பால் சிங் கபா என்ற நபரை என்.ஐ.ஏ கைது செய்ததாக கடந்த வியாழக் கிழமை கூறியது. இதுகுறித்து என்.ஐ.ஏ  இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளது. வழக்கு மற்றும் கைதுக்கான காரணம் மற்றும் பிற விவரங்களை வரும் நாட்களில்  என்.ஐ.ஏ  வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “காபா ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர். அவர் 1995 இல் லண்டனுக்குச் சென்று ஒரு மளிகைக் கடையைத் தொடங்கினார். அவர் கிரேட்டர் லண்டனில் ஸ்ட்ராபெரி லோக்கல் குரூப் என்ற பெயரில் 3 கடைகளை நடத்தி வருகிறார், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வசிக்கிறார்கள். 

மேற்கு டெல்லியில் உள்ள அவரது வீடு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அவர் துபாயில் இருந்து பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்ற புனிதத் தலத்திற்குச் சென்றார். அவர் அங்கு வழக்கமாக சென்று வந்துள்ளார். டிசம்பர் 9 ஆம் தேதி, அவர் பொற்கோவிலுக்குச் செல்வதற்காக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தபோது, ​​​​அட்டாரி எல்லையில் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்டார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறினர். 

வன்முறையின் போது எடுக்கப்பட்ட 5 வீடியோ பதிவுகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு  உள்துறை அமைச்சகம் (MHA) லுக் அவுட் சர்க்குளர் (LOC) வழங்கியது. இந்த வீடியோக்கள் கடந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்திற்கு பயணம் செய்த ன்ஐஏ குழு இந்த சம்பவம் மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தொடர்பு குறித்து விசாரணை நடத்தும் போது இந்த வீடியோக்களைப் பெற்றது. 

குழு இந்தியாவுக்குத் திரும்பியதும், என்ஐஏ 45 சந்தேக நபர்களின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பொது வெளியில் பகிர்ந்துள்ளதோடு, அவர்களை அடையாளம் காண உதவும் வகைகளையும் கொண்டது.

மேலும் அதிகாரிகள் கூறுகையில், மக்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியே கூடி, பின்னர் வன்முறையில் ஈடுபடுவதை அந்த வீடியோவில் காண முடிந்தது. புலனாய்வு அமைப்புகள் இதுபற்றிய விவரங்களைச் சேகரித்தன. தொடர்ந்து என்.ஐ.ஏ அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக எல்.ஓ.சி அனுப்பியது. காபா கைது செய்யப்பட்டபோது, ​​புலனாய்வு அமைப்புகளின் குழு அவரை விசாரித்தது மற்றும் அவரது தொலைபேசியைக் கைப்பற்றியது, அங்கிருந்து தரவு பிரித்தெடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. போராட்டத்தின் போது காபா இந்திய தேசியக் கொடியை சேதப்படுத்தி எச்சரிக்கையும் விடுத்துள்ளார், ”என்று கூறினர். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/indian-embassy-attack-arrested-uk-national-had-vandalised-indian-flag-during-protest-9292856/

“டிசம்பரில் விசாரணைக்குப் பிறகு காபா விடுவிக்கப்பட்டார், ஆனால் கடந்த நான்கு மாதங்களில் ஐந்து முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 

சட்ட ஆலோசனைக்குப் பிறகு, அவரை வியாழக்கிழமை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. யுஏ (பி) சட்டத்தின் பிரிவு 13(1), தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

காபாவின் வழக்கறிஞர் சத்வந்த் சிங்கை தொடர்பு கொண்டபோது, ​​இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், என்.ஐ.ஏ கூற்றுப்படி,  மார்ச் 19 மற்றும் 22 தேதிகளில் லண்டனில் நடந்த சம்பவங்கள் இந்திய தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கான ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்று விசாரணையில் இதுவரை தெரியவந்துள்ளது.

"மார்ச் 2023 இல் லண்டனில் நடந்த தாக்குதல்கள் மார்ச் 18, 2023 அன்று காலிஸ்தானி சார்பு பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை எடுத்த நடவடிக்கைக்குப் பதிலடி என்று கண்டறியப்பட்டது" என்று NIA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மார்ச் 19, 2023 அன்று, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது சுமார் 50 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது. அவர்கள் கிரிமினல் அத்துமீறல், இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்தல், பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் தூதரக அதிகாரிகளை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தூதரக  அதிகாரி ஒருவர் பதிவு செய்த எஃப்ஐஆரின்படி, தாக்குதலை நடத்தியவர்களில் இங்கிலாந்தின் தல் கல்சாவைச் சேர்ந்த குர்சரண் சிங், காலிஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த அவதார் சிங் கந்தா மற்றும் ஜஸ்விர் சிங் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment