தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 24 மணிநேர நிச்சயமற்ற சூழலில், இந்தியா செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் தலைநகரில் உள்ள தூதர் ருத்ரேந்திர டாண்டன் உட்பட தனது முழு தூதரகத்தையும் ஒரு சிறப்பு இந்திய விமானப்படை (IAF) விமானத்தின் மூலம் வெளியேற்றியது.
1996ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா தனது தூதரகத்திலிருந்து அனைத்து தூதர்களையும் பணியாளர்களையும் வெளியேற்றுவது இது இரண்டாவது முறையாகும். இரண்டு முறையும் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு நடந்தது. கடந்த சில வாரங்களாக, கந்தஹார் மற்றும் மசார்-இ-ஷெரீப் தூதரகங்களிலிருந்தும், தலிபான் எழுச்சியாலும், முன்னதாக ஹெராட் மற்றும் ஜலாலாபாத்தில் உள்ள தூதரகங்களிலிருந்தும் கோவிட் காரணமாக இந்தியா தனது தூதரக ஊழியர்களை வெளியேற்றியது.
IAF C-17 குளோப்மாஸ்டர் விமானம் தூதர்கள், தூதரக ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மூன்று மோப்ப நாய்கள் உட்பட 129 இந்தியர்களுடன் காபூலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 6.30) புறப்பட்டது.
இந்த விமானம், பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்லாமல், ஈரான் மீது பறந்து குஜராத்தின் ஜாம்நகரில் காலை 11.30 மணியளவில் தரையிறங்கியது. அங்கே எரிபொருள் நிரப்பப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு அடைந்தது.
“மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மிகவும் அசாதாரணமான சூழ்நிலைகளில் முடிவெடுத்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மொத்த பணியும் முடிந்துவிட்டது. நம்முடைய மக்கள் யாருக்கும் எந்த விபத்தோ, பாதிப்போ இல்லாமல் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வீடு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று டான்டன் ஜாம்நகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“நாம் 192 பேர்களின் மிஷன் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து மூன்று நாட்களுக்குள் மிகவும் நல்ல முறையில் வெளியேற்றப்பட்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கூறுகையில், “காபூலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நம்முடைய தூதரக பணியாளர்கள் உடனடியாக இந்தியாவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நிறைவடைந்துள்ளது. தூதர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிற அனைத்து பணியாளர்களும் இன்று மதியம் புதுடெல்லியை வந்தடைந்தனர்.
விமான நிலைய நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு முன்னர் திங்கள்கிழமை அதிகாலையில் மற்றொரு சி-17 விமானம் தூதரகத்தில் இருந்து 40 பேரை அழைத்து வந்தது. இது கடந்த இரண்டு நாட்களில் இது இந்தியாவின் இரண்டாவது விமானம் ஆகும்.
“ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவதே எங்களின் உடனடி வேலை” என்று வெளியுறவு அமைச்சகம் தனது சிறப்பு ஆப்கானிஸ்தான் செல்லி இருந்து கிடைக்கக்கூடிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்தது.
காபூல் விமான நிலையம் வணிக நடவடிக்கைகளுக்கு திறந்தவுடன் அனைத்து இந்திய குடிமக்களையும் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை, அமெரிக்காவிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், “காபூலில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக” ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோரின் கவலையைப் புரிந்து கொள்ளுங்கள். விமான நிலைய செயல்பாடுகள் முக்கிய சவாலாக உள்ளது. அது சம்பந்தமாக கூட்டாளிகளுடன் கலந்துரையாடல்கள் நடக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் வளர்ந்து வரும் நிலைமை குறித்து பேசினார். வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இந்த உரையாடல் வெளியேற்றத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும், காபூலில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய விமானத்ம் புறப்பட அனுமதிக்கப்பட்டது.
ஜெய்சங்கர் மற்றொரு ட்வீட்டில், காபூலில் விமான நிலைய நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பாக அமெரிக்க முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
“ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் மற்றும் திரும்புவதற்கான முக்கிய சவாலாக காபூல் விமான நிலையத்தின் செயல்பாட்டு நிலைமை இருக்கிறது. இது அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் (வெளிவிவகார அமைச்சர்) உட்பட நம்முடைய கூட்டாளிகளுடன் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காபூல் விமான நிலையத்தில் நிலவிய குழப்பமான காட்சிகளால் ஒரு நாள் பதற்றத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வெளியேற்றம் நடந்தது. காபூல் விமான நிலையம் தலிபான் ஆட்சியில் இருந்து தப்பிக்க விரும்பும் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களால் சூழப்பட்டது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி இன்று காலை ட்விட்டரில், “நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, காபூலில் உள்ள நம்முடைய தூதரும் அவரது இந்திய ஊழியர்களும் உடனடியாக இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், தூதரகம் ஒப்புதல்களைப் பெற அடைந்தபோது, புதிய தலிபான் ஆட்சியில் அதன் கட்டமைப்புகள் இன்னும் கிடைக்காததால் வெளியேற்றம் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருப்பதை கண்டடைந்தது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய ஞாயிற்றுக்கிழமை இந்த செயல்முறை தொடங்கியது. அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதிக்கு இரண்டு கான்வாய்கள் மூலம் அன்றைக்கே வெளியேற்றத்தை முடிக்கும் திட்டம் இருந்தது.
45 பேர் கொண்ட முதல் வாகனம் அந்நாட்டை விட்டு வெளியேற முடிந்தது. ஆனால் 130 பேர் கொண்ட இரண்டாவது தொகுதி விமான நிலையத்தை அடைய முடியவில்லை. ஏனெனில், அங்கே களத்தில் நிலைமை மாறியது. தலிபான்கள் அவர்களை தொடர அனுமதிக்க மறுத்தனர்.
திங்கள்கிழமை நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் தார்ச்சாலையில் திரண்டதால் தூதரகம் மீதமுள்ள குழுவை வெளியேற்ற மீண்டும் முயன்றது. ஆனால், தலிபான்களிடமிருந்து அனுமதி எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது. பின்னர், தூதரகம் ஹெலிகாப்டர்களில் விமான நிலையத்திற்கு விமானத்தை ஏற்றிச் செல்வதற்கான சாத்தியத்தை ஆராய்ந்தது. ஆனால், அந்த திட்டமும் செயல்படவில்லை.
கொஞ்ச நேரம் விஷயம் என்று கருதப்படும் ஒப்புதல்களுக்கான காத்திருப்பு மணிநேரமாக மாறியது. நாள் முழுவதும் முன்னும் பின்னுமாக கழிந்தது. இதற்கிடையில், இந்த நிருபர் உட்பட அதிகமான பொதுமக்கள் தூதரகத்தை அடைந்து வெளியேறும் விமானத்தில் சேர்ந்தனர்.
இறுதியாக, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, தாலிபான்களிடமிருந்து ஒப்புதல் வந்தது. அதன்பிறகு, விமான நிலையத்தின் வெளிப்புற சுற்றளவு வரை தலிபான் போராளிகளால் கான்வாய் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வசதியை அணுக இன்னும் சிறிது நேரம் பிடித்தது.
ஆப்காணில் இருந்து வெளியேற்றப்பட்டு அழைத்து வரப்பட்டவர்களை ஜாம்நகரில் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் வரவேற்றனர். குஜராத் அமைச்சர் தர்மேந்திரசிங் ஜடேஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், வெளியேற்றப்பட்டவர்களை மாலைகளுடன் வரவேற்க சாலையில் சென்ற ஒரு குழுவில் இருப்பதாகக் கூறினார். விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஆப்கானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கல் மதிய உணவிற்கு அழைத்துச் செல்லபப்ட்டனர் என்று கூறினார்.
“பயணிகளில் தூதரகத்தின் சுமார் 80-100 பணியாளர்கள், ITBP பணியாளர்கள், (தூதரகத்தை பாதுகாத்து வந்த இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை) மற்றும் பொதுமக்கள் இருந்தனர்” என IAF நிலையத்தில் இருந்த ஜாம்நகர் மாவட்ட ஆட்சியர் சௌரப் பார்தி கூறினார்.
இதனிடையே, தூதர் டான்டன், இந்தியா தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதால், அங்கு இன்னும் சில இந்திய குடிமக்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். அதனால்தான், காபூலில் உள்ள விமான நிலையம் செயல்படும் வரையில், காபூலுக்கு ஏர் இந்தியா தனது வணிக சேவைகளை தொடர்ந்து நடத்தும் என்று அவர் கூறினார்.
டாண்டன் காபூலில் சிக்கித் தவிக்கும் ஆப்கானியர்களைப் பற்றி குறிப்பிடுகையில், “நாங்கள் ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட்டது போல எதுவும் இல்லை” என்றார். “அவர்களின் நலன் மற்றும் அவர்களுடனான நமது பழைய உறவு நம் மனதில் அதிகம் உள்ளது. நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். அவர்களுடனான நம்முடைய தொடர்புகளைத் தொடர முயற்சிப்போம்” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.